மன்னாரில் இரண்டாவது எண்ணெய் அகழ்வு நேற்று ஆரம்பம்
மன்னாரில் இரண்டாவது எண்ணெய்க்கிணறு தோண்டப்படுகின்றது. நேற்று ஆரம்பமான இரண்டாவது எண்ணெய்க் கிணறு அகழும் பணி 2012 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் தொடங்கும் என கேன் இந்தியா எனும் எண்ணெய் அகழ்வு நிறுவனம் கூறியுள்ளது.
.
முன்னைய அகழ்வில் 25 மீட்டர் கனதியான ஹைட்ரோ காபன் படிவுகள் கண்டு பிடிக்கப்பட்டன. இதன் மூலம் நிலவாயுவினை உற்பத்தி செய்ய முடியும் என கூறப்படுகின்றது. இந்த அகழ்வு சுமார் 3000 மீட்டர்கள் கடலுக்கடியில் மேற்கொள்ளப்பட்டன.
.
இந்த அகழ்வுப்பணிகள் சரியாக நடைபெறுமாக இருந்தால் 2014 ஆம் ஆண்டில் வர்த்தக ரீதியிலான எரிபொருள் உற்பத்திக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என கேன் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.
மன்னாரில் இரண்டாவது எண்ணெய் அகழ்வு நேற்று ஆரம்பம்
Reviewed by NEWMANNAR
on
October 23, 2011
Rating:

1 comment:
பொருளாதார வளர்ச்சியை மட்டும் நோக்ககூடாது.. புவியியல் ரீதியான மன்னாரின் எதிர் கால நிலைத்திருப்பையும் பார்க்கவெண்டும்.. இருக்கின்ற நிலமே கால் நீட்டி படுக்க முடியாத நிலையில் கரைகளை தோண்டினால் தரைகள்தான் மிஞ்சுமா??? புத்திஜீவிகளும் சக்திஜீவிகளும் சிந்திக்கவேண்டியது!!!!
Post a Comment