மன்னார் பசார் பகுதி பாதை ஒரு வழிப் பாதையாக மாற்றம்
மன்னார் பஸ் தரிப்பிடம் மற்றும் முக்கிய கடைகளுக்கு செல்லும் பிரதானபாதை ஒன்றை நகரசபையும் வீதி போக்கு வரத்து பொலிசாரும் இணைந்து ஒரு வழிப் பாதையாக மாற்றி உள்ளனர்.
மன்னார் போலீஸ் நிலைய வீதி ஊடாக வந்து வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள பெரியகடை வீதி ஊடக பசார் பகுதிக்கு செல்லும் பாதையே நேற்று
வியாழகிழமை முதல் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
இப் பகுதியில் வாகன நெரிசல் காணப்பட்டதாலேயே குறித்த வீதியை ஒரு வழிப் பாதையாக மாற்றியதாக வீதி போக்கு வரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த வீதிக்கு முன்பாக இவ் வீதியால் செல்ல முடியாதென குறியீட்டு பலகை ஒன்றும் போடப்பட்டுள்ளது குறித்த வீதி ஊடக பசார் பகுதியினுள் செல்ல முடியாது காணப்பட்ட போதிலும் இவ் வீதி ஊடக பசார் பகுதியில் இருந்து வெளியே வர முடியும்.
இவ்வாறு பசார் பகுதிக்கு செல்லும் பாதை ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளதனால் மன்னார் மக்களும் அப்பகுதியில் உள்ள வர்த்தகர்களும் ஷௌகர்யங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
மன்னார் பசார் பகுதி பாதை ஒரு வழிப் பாதையாக மாற்றம்
Reviewed by NEWMANNAR
on
October 28, 2011
Rating:

No comments:
Post a Comment