அண்மைய செய்திகள்

recent
-

நவம்பர் 4ம் நாள் வரை அமெரிக்க அதிகாரிகளுடனான சந்திப்புகள் தொடரும் – த.தே.கூட்டமைப்பு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் வொசிங்டன் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு, அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களுடன் அங்கு தொடர்ச்சியான பேச்சுக்களை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரா.சம்பந்தன் தலைமையிலான இந்தக் குழுவில் மாவை.சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


கடந்த 26ம் நாள் தொடக்கம் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருவதாகவும், அடுத்த மாதம் 4ம் நாள் வரை பேச்சுக்கள் தொடரும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தகவல் வெளியிட்டுள்ளதாக பிபிசி கூறியுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் பலரையும் இதுவரை சந்தித்திருப்பதாகவும், மேலும் சில முக்கிய செனெட் உறுப்பினர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போருக்குப் பிந்திய நல்லிணக்கம் குறித்து சிறிலங்கா அரசாங்கம் வெளி உலகுக்குக் கூறினாலும், உண்மையான நடப்புகள் அதற்கு நேர்மாறாக இருப்பது குறித்து சந்திப்புகளின் அமெரிக்க அதிகாரிகளுடன் விவாதித்தாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசியல்தீர்வு தொடர்பாக சிறிலங்கா அரசு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறதா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர் தெரிவித்துள்ளார்.

“சிறிலங்கா அரசு மீது அரசியல்தீர்வு குறித்து ஏற்கனவே அமெரிக்கா அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இதை சிறிலங்கா அரசு சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறதா என்று சரியாகத் தெரியவில்லை.

அமெரிக்காவின் அழுத்தம் மட்டும் போதாது, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற, ஏனைய அனைத்துலக சமூகத்தின் அழுத்தமும் ஒத்துழைப்பும் தேவை“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அதேவேளை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களச் சந்திப்புகளின் முடிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றுடன் அமெரிக்கச் சந்திப்புகளை முடித்துக் கொண்டு கனடா செல்லவுள்ள சுரேஸ் பிறேமச்சந்திரன் தவிர்ந்த ஏனைய மூவரும், மீண்டும் அமெரிக்கா திரும்பி வந்து பேச்சுக்களைத் நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

புலம்பெயர் சமூகத்துடனான சந்திப்புக்குச் கனடா செல்வதற்கு சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கு நுழைவிசைவு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 4ம் நாள் வரை அமெரிக்க அதிகாரிகளுடனான சந்திப்புகள் தொடரும் – த.தே.கூட்டமைப்பு Reviewed by NEWMANNAR on October 29, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.