அண்மைய செய்திகள்

recent
-

மீனவர்களுக்கான எரிபொருள் மானியம் தொடர்ந்து அமுலில் இருக்குமா?

எரிபொருள் விலையேற்றம் காரணமாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து அரசாங்கம் மீனவர்களுக்கு மண்ணைண்ணைய்க்கு 25 சதவீதமும் டீசலுக்கு 12சதவீதமும் மானியமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதற்கான மானிய அறிவிப்பு தொடர்ந்து அமுலில் இருக்குமா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.


இன்று வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இக்கேள்வியை எழுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'அரசாங்கத்தால் திடீர் என்று எரிபொருட்களுக்கு விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்ததுடன், நாட்டில் அசாதாரண சூழ்நிலையும் தோன்றியுள்ளது. நாட்டின் பல பாகங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் இடம்பெறுகின்றன. இந்த நிலையிலேயே கடல்த் தொழிலாளர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மண்ணெண்ணைய் விலை 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு 25 ரூபா மானியமும் டீசல் 31 ரூபாவினால் அதிகரிப்புக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு 12 ரூபா மானியமும் வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இருப்பினும் மண்ணெண்ணைய்க்கு 10 ரூபாவும் டீசலுக்கு 19 ரூபாவும் மேலதிகமாக செலுத்த வேண்டிய நிலையில் இவர்கள் உள்ளனர்.

கடல்த் தொழிலாளர்கள் பல்வேறு வகையில் கடல்த் தொழிலில் ஈடுபடுகின்றனர். ஆழ்கடல் மீன்பிடி, சிறிய படகுகள் மூலம் மீன்பிடித்தல், சூழ்விளக்கைப் பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுதல், கரைவலையில் மீன்பிடித்தல் போன்ற பல வகைகளில் கீழ் மீன் பிடிக்கின்றனர். இதற்கு அதிகளவான எரிபொருள் தேவைப்படுகின்றது. இந்த நிலையில் அரசாங்கம் அறிவித்துள்ள இந்த மானியம் ஒழுங்காக தொடர்ந்து எவ்வளவு காலத்திற்கு வழங்கப்படும் என்பது சந்தேகமாக உள்ளது.

ஆழ்கடல் மீனவர்களுக்கு நாள் ஒன்றிற்கு 100 லீற்றர் மண்ணெண்ணைய் தேவைப்படும் பட்சத்தில் நாள் ஒன்றிற்கு 1000 ரூபாவை மேலதிகமாக செலவிடவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இது இவ்வாறிருக்க மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் மீள்குடியேற்றக் கிராமங்களில் வாழ்ந்து வரும் மக்கள் மின்சார வசதி இன்றி உள்ளனர். இவர்கள் தமது அன்றாட தேவைகளுக்கு மண்ணெண்ணையே பயன்படுத்துகின்றனர். கல்வி, சமையல், விவசாயம் போன்றவற்றிற்கு மீள்குடியேற்றக் கிராமங்களில் முக்கிய எரிபொருளாக மண்ணெண்ணையே பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்களுக்கு மாற்றுத்திட்டம் அமுல்படுத்தப்படவில்லை. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள் குடியேறியுள்ள இந்த மக்கள் வறிய நிலையிலேயே உள்ளனர். எரிபொருட்களின் அதிரடி விலையேற்றத்திற்கு ஈடுகொடுக்க முடியாதவர்களாக இந்த மக்கள் உள்ளனர். பொருட்களின் விலையும் உயர்வடைந்துள்ளது. விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் அனைவரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே மானியம் என்பது அனைவருக்கும் ஒருமித்த தீர்வாக அமையாது. எரிபொருட்களின் விலையை மீண்டும் குறைப்பதன் மூலம் இதற்கு சாதகமான ஒரு தீர்வு கிடைக்கும்' என்றார்.
மீனவர்களுக்கான எரிபொருள் மானியம் தொடர்ந்து அமுலில் இருக்குமா? Reviewed by Admin on February 17, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.