அண்மைய செய்திகள்

recent
-

மரணத்தின் விளிம்புவரை சென்று மீண்டுவந்து துயரத்தில் இருப்பவர்கள் தனித்து விடப்பட்டவர்கள் அல்லர்: 18ஆம் திகதி அஞ்சலி நிகழ்வுக்கு சிவசக்தி ஆனந்தன் அழைப்பு.

எமது உரிமைப் போராட்டத்தில் நாம் பல இழப்புக்களைச் சந்தித்துள்ளோம். இருந்தபோதிலும் இங்கு சென்றால் காப்பாற்றப்படுவோம், அங்கு சென்றால் பாதுகாப்பாக இருக்கும் என்று இறுதி நேரத்தில் மரணத்தைத் தவிர்ப்பதற்காக ஓடி ஓடி இறுதியில் காலனிடம் தம் உயிரைப் பறிகொடுத்த எம் உறவுகள் எத்தனைபேர் என்று இன்றுவரை கணக்கிட முடியவில்லை' என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.


இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு நாள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார், அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: மரணத்தின் விளிம்புவரை சென்று இன்று மீண்டுவந்து உயிர்வாழ்கின்ற உறவுகளாக இருந்தாலும் சரி, தமது உறவுகளை இழந்துவிட்டு இன்றுவரை உளக்குமுறலுடன் வாழ்க்கையை நடத்துகின்ற எமது உறவுகளாக இருந்தாலும் சரி, தமது துயரத்தையும், மனப்பாரத்தையும், மன அழுத்தத்தையும் ஓரளவிற்காவது இறக்கி வைப்பதற்கான சந்தர்ப்பங்கள் பரவலாக ஏற்படுத்தப்பட வேண்டும். துயரத்தில் இருப்பவர்கள் தனித்து விடப்பட்டவர்கள் அல்லர். அவர்களுக்கு ஆறுதலளிப்பதற்கும், அவர்களது துயரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் தயாராக இருப்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் குறைந்தபட்சம் வவுனியாவில் உள்ள அனைவரும் அன்றைய தினம் தங்களது அனைத்து நிகழ்வுகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும்.
எதிர்வரும் 18ஆம் திகதி காலை 10 மணியளவில், வவுனியா நகரசபை மண்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மரணத்தின் விளிம்புவரை சென்று மீண்டுவந்து துயரத்தில் இருப்பவர்கள் தனித்து விடப்பட்டவர்கள் அல்லர்: 18ஆம் திகதி அஞ்சலி நிகழ்வுக்கு சிவசக்தி ஆனந்தன் அழைப்பு. Reviewed by NEWMANNAR on May 17, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.