வன்னி பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.
வன்னி மாவட்டத்திலுள்ள வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 750 பட்டதாரிகளுக்கு நேற்று திங்கட்கிழமை வவுனியா நகர சபையின் கலாசார மண்டபத்தில் வைத்து நியமனங்கள் வழங்கப்பட்டன.
கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்நியமனங்களை வழங்கினார். இதன்போது, வவுனியாவை சேர்ந்த 293 பட்டதாரிகளுக்கும் முல்லைத்தீவை சேர்ந்த 127 பட்டதாரிகளுக்கும் மன்னாரை சேர்ந்த 330 பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், ஜனாதிபதியின் இணைப்பாளர்கள், மூன்று மாவட்டங்களின் செயலாளர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
வன்னி பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.
Reviewed by Admin
on
July 10, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment