அண்மைய செய்திகள்

recent
-

மின்சார சபைக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்ய தீர்மானம் _


மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக திடீர் திடீர் என மின்சாரம் தடைப்பட்டு வருவதனால் மின் பாவனையாளர்களது பல இலட்சம் ரூபா பெறுதியான மின் சாதனப்பொருட்கள் பழுதடைந்துள்ள நிலையில் மன்னார் மின்சார சபைக்கு எதிராக மின் பாவனையாளர்கள் வழக்குத்தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளனர்.


-மன்னார் மாவட்டத்தில் திடீர்,திடீர் என நாள் ஒன்றிற்கு பல தடவை மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.இதனால் மின் பாவனையாளர்களது கணனி,தொலைக்காட்சிப் பெட்டி, வானொலி உள்ளிட்ட பெறுமதி வாய்ந்த பல மின் சாதனப் பொருட்கள் பழுதடைந்துள்ளன.

மின் தடங்கல் தொடர்பில் கேட்டால் மன்னார்- மதவாச்சி பிரதான வீதியில் உள்ள மின் கம்பங்களில் உப்புக்காற்று படிவதினால் மின் தடை ஏற்படுவதாக மன்னார் மின்சாரசபை ஊழியர்கள் பாவனையாளர்களுக்கு பொறுப்பற்ற விதத்தில் பதில் கூறுகின்றனர்.

இரவு பகல் பாராது குறித்த மின் தடங்கல் தற்போது தொடர்ந்தும் தடைப்படுகின்றது.ஆனால் மின் பட்டியலோ மாதம் தவறாமல் அதிகரித்த தொகையுடன் பாவனையாளர்களைச் சென்றடைகின்றது.

இரண்டாம் தவணைப்பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில் தற்போது மின் தடையால் இரவு நேரங்களில் மாணவர்கள் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட முடியாத நிலை ஏறபட்டுள்ளது.

பல்வேறு அசௌகரியங்களுக்கு தொடர்ந்து முகம் கொடுத்து வருகின்ற மின் பாவனையாளர்கள்; மன்னார் மின்சார சபைக்கு எதிராக நஷ்ட ஈடு கோரி வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாக பாதிக்கப்பட்ட மின் பாவனையாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களை விட தற்போது மன்னார் மின்சார சபையின் செயற்பாடுகள் மிகவும் மந்த கதியில் உள்ளதாகவும்,உடனுக்குடன் திருத்த வேலைகளைச் செய்வதில்லை எனவும் மின் பாவனையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மின்சார சபைக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்ய தீர்மானம் _ Reviewed by Admin on July 09, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.