மளங்காடு பகுதியில் குடியேறியுள்ள மக்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும்: வினோ எம்.பி.
மளங்காடு பகுதியில் குடியேறியிருக்கும் முள்ளிக்குளம் மக்களுக்கான அடிப்படைவசதிகள் துரிதகதியில் செய்து கொடுக்கப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்தக்ர்.
இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2007ஆம் ஆண்டு முசலிப் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் காரணமாக அந்தப் பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேறியிருந்தனர்.
நாட்டின் வடபகுதியான வன்னிப்பிரதேசத்தின் மீது முன்னெடுக்கப்பட்ட இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கையினைத் தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் முடிவடைந்ததாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
இதனை அடுத்து மீள்குடியேற்ற நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் கட்டங்கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஆயினும் முசலிப் பிரதேசத்தின் முள்ளிக்குளம் கிராமத்தை தவிர்ந்த ஏனைய கிராமங்களில் தமிழ், முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேறியிருக்கின்றன.
இந்த நிலையில் நீண்ட பல காலங்களுக்குப் பின் முள்ளிக்குளம் மக்கள் தமது பூர்வீக கிராமமான முள்ளிக்குளத்திற்கு அருகாமையில் உள்ள மளங்காடு எனப்படும் பெரியகுளம் பகுதியிலேயே குடியேற்றப்பட்டிருக்கின்றனர்.
மளங்காடு பகுதியில் குடியேறியுள்ள மக்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும்: வினோ எம்.பி.
Reviewed by Admin
on
July 06, 2012
Rating:

No comments:
Post a Comment