அண்மைய செய்திகள்

recent
-

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மன்னார் பேசாலை சென் மேரிஸ் பெண்கள் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமிப்பு


மன்னார் பேசாலை சென் மேரிஸ் பெண்கள் பாடசாலைக்கு அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரி பாடசாலை மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் நேற்று வியாழக்கிழமை மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அப்பாடசாலைக்கு புதிய அதிபர் ஒருவரை மன்னார் வலயக் கல்வி திணைக்களம் நியமித்துள்ளது.


இப்பாடசாலையானது கடந்த ஜனவரி மாதம் முதல் அதிபர் இல்லாத நிலையில் இயங்கி வந்தது. இதேவேளை, இப்பாடசாலையில் கற்பித்த ஆசிரியர்கள் பலர் தொடர்ந்தும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இவ்விடயம் தொடர்பில்; மாணவர்களின் பெற்றோர்களால் மன்னார் வலயக் கல்வித் திணைக்களத்திற்கு முறையிட்டப்போதும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இவ் ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து புதிய அதிபர் ஒருவர் இப்பாடசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மன்னார் பேசாலை சென் மேரிஸ் பெண்கள் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமிப்பு Reviewed by Admin on July 06, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.