ஸ்ரீ குருபுஜை நிகழ்வும், காவிக்கொடி வழிபாடும் ..
மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் ஸ்ரீ குருபுஜை நிகழ்வும், காவிக்கொடி வழிபாடும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.04.07.2012 அன்று, மாலை 4.00 மணிக்கு பக்தி சொட்டும் வண்ணம் நிகழ்ந்தேறிய இதனை ஹிந்து ஸ்வயம் சேவக சங்கம் ஒழுங்கு செய்திருந்தது. இந்து தர்மம், இந்து கலாசாரம் ஆகியவற்றைப் பேணும் வகையில் அரிய பணிகளை இச்சங்கம் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருவது தெரிந்ததே. அதன் ஒரு அங்கமாக மன்னாரிலும் பல ஆன்மீக நிகழ்வுகளை இச்சங்கம் நடாத்தி வருவது மன்னார்வாழ் இந்துக்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.
இந்துக்களின் மேன்மைகளை அடையாளப்படுத்துகின்ற காவிக்கொடியை ஏற்றி வழிபட்டதும், இந்து தர்மக்கொள்கைகளை வெளிப்படுத்தும் வண்ணம் இடம்பெற்ற சிறப்புரைகளும் சிந்தைனைக்கு விருந்தளித்தன. கொழும்பிலிருந்து வருகை தந்த பிரதிநிதிகளின் அற்புதமான உரைகள் விழிப்புணர்வை தந்தது.
ஸ்ரீ ராஜேந்திரன் ஜீ , திரு. இராமகிருஷ்ணன், பிரம்ம ஸ்ரீ தர்மகுமார சர்மா,
கல்லூரி அதிபர் திரு தயானந்தராஜா, திரு.பிருந்தாவனநாதன், திரு. சூரியகுமார், திரு. நடேசன் ஆகியோர் உட்பட பல பெரியோர்களும் வழிநடத்திய இந்த குருபுஜை நிகழ்வில் பெருமளவில் பக்தர்கள் கலந்து பயன்பெற்றனர்.
ஸ்ரீ குருபுஜை நிகழ்வும், காவிக்கொடி வழிபாடும் ..
Reviewed by NEWMANNAR
on
July 06, 2012
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 06, 2012
Rating:

No comments:
Post a Comment