அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ”1023 வருடங்கள்” எனும் குறுந்திரைப்பட Trailer 03.08.2012 அன்று வெளியிடப்பட்டது.-காணொளி இணைப்பு

இலங்கை தமிழ் சினிமா மற்றும் குறுந்திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக, மனித இயற்க்கையை மாற்ற முயற்ச்சிக்கும் விஞ்ஞான தொழில்நுட்பமும் அதனை எதிர்பார்க்கும் ஒருசிலரின் ஆராய்ச்சியும் எந்த அளவிற்க்கு வெற்றி அளித்தது என்பதை நவீன கால காதல் கதையுடன் தெளிவுபடுத்தும் வகையில் மிக வேகமாக உருவாகிக்கொண்டிருக்கும் குறுந்திரைப்படம் “1023 வருடங்கள்”.


இக்குறுந்திரைப்படத்தில் கணணி வரைகலை(Computer Graphic) தொழில்நுடப்பத்தினை சரியான முறையில் பயன்படுத்தியுள்ளனர். மன்னார் பள்ளிமுனை St.Lucia Production டிலான் மற்றும் Asha Production நிரஞசனன் ஆகியோர் தயாரிக்கும் “ 1023 வருடங்கள்” குறுந்திரைப்படத்தினை
“பட்டாசு” இயக்குனர் த.ஷமிதன் இயக்குகிறார்.இது இவரது 5வது குறுந்திரைப்படம் என்பது குரிப்பிடத்தக்கது.
அத்தோடு சொ.அனுதீபன் ஒளிப்பதிவினையும், பா.பார்த்தீபன் படத்தொகுப்பினயும்(Sunsonic Editing Lab - Mannar), தர்ஷணன் இசை அமைப்பிலும்,
த.சைதன்யன் (Griffin EFX Studio - Mannar ) வரைகலையினையும் மிக நேர்த்தியாக மேற்கொண்டு வருகின்றன்ர்.

இலங்கை குறுந்திரைப்ப்பட வரலாற்றில் புதிய பரினாமத்தை நோக்கி பயணம் செய்ய தயாராகும் இக்குழுவில் இவர்களது நண்பர்கள் யாழ்.மண்ணில் உள்ள Himalaiya Creations CEO துவாரகன் மக்கள் தொடர்பாடல் அதிகரியாகவும்(PRO), அந்திறுவன படத்தொகுப்பளர் துசிகரன் துணை ஒளிப்பதிவாளராகவும், சிவராஜ் இனண இயக்குனராகவும் மற்றும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த தொம்சன் துணை இயக்குனரகவும் அத்தோடு மணி மாறன் உதவி இயக்குனரகவும் மற்றும் லிங்கரூபன் உதவி ஒளிப்பதிவாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.


இறுதிக்கட்ட தயாரிப்பில் உள்ள “1023 வருடங்கள்” குறுந்திரப்படம் வெகு விரைவில் வெளிவர உள்ளதோடு இலங்கை குறுந்திரப்பட வரலாற்றில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தி தென்னிந்திய குறுந்திரப்படங்களுக்கு இணையானதாக அமைய வேண்டும் என இந்த Trailer னை பார்வையிட்ட மக்கள் வாழ்த்துகிறார்கள். இவர்களோடு இக்குழுவிற்கு எமது வாழ்த்துக்களையும் பகிர்கின்றோம்.

நன்றி
மன்னாரில் ”1023 வருடங்கள்” எனும் குறுந்திரைப்பட Trailer 03.08.2012 அன்று வெளியிடப்பட்டது.-காணொளி இணைப்பு Reviewed by NEWMANNAR on August 04, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.