அண்மைய செய்திகள்

recent
-

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு கண்டனத்தீர்மானம்


கடந்த 11 ஆம் திகதி(11-08-2012) பாராளுமன்றத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் பாலியல் துஸ்பிரையோகம் தொடர்பில் கிறிஸ்தவர்களை அடையாளப்படுத்தி ஆற்றிய உரைக்கு மன்னார் நகர சபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் மெரினஸ் பெரேரா கண்டனத்தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளார்.

-மன்னார் நகர சபையின் மாதாந்த கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற போது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் உரையாற்றினார். அவரது உரையில் அனைத்து மதத்தலைவர்களும் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பாக தான் ஒரு கிறிஸ்தவன் என்ற வகையில் கிறிஸ்தவர்களும் அதிகள வில் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் உரையாற்றியிருந்தார்.

.அவரது உரைக்கு மன்னார் நகர சபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் மெரினஸ் பெரேரா கண்டணத்தீர்மானத்தை நிறைவேற்றினார்.

-நகர சபை உறுப்பினர் ஆகிய நான் ஒரு கத்தோலிக்கன் என்ற வகையிலும் இளைஞன் என்ற வகையிலும் பாராளுமன்ற உறுப்பினரின் குறித்த உரைக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

-மதத்தலைவர்கள் ஆன்மீகத்தில் மட்டுமன்றி இன விடுதலைக்காகவும் சமூகத்திற்காகவும் போராடியவர்கள்.போராடுபவர்கள்.அவர்கள் தம்மை அதற்காகவே அர்ப்பணித்துள்ளனர்.இப்படிப்பட்ட மதத்தலைவர்கள் சிலரை நாம் இன்று இழந்து நிற்கின்றோம்.இப்படிப்பட்ட மதத்தலைவர்கள் தொடர்பில் உரையாற்றியமைக்கு நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

தமிழரசுக்கட்சியின் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் கொச்சைத்தனமாக பேசியிருக்கின்றார்.

எனவே அவருடைய உரைக்கு தான் வன்மையான கண்டனத்தை முன்வைப்பதாக மன்னார் நகர சபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் மெரினஸ் பெரேரா தெரிவித்தார்.குறித்த கண்டனத்தீர்மானத்தை மன்னார் நகர சபையின் தலைவர்,உப தலைவர்,ஆளுந்தரப்பு,எதிர் தரப்பு உறுப்பினர்கள் ஏகமனதாக நிறைவேற்றினர்.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு கண்டனத்தீர்மானம் Reviewed by NEWMANNAR on August 30, 2012 Rating: 5

1 comment:

Unknown said...

avar ellorayum sollavillaye. thavaru seibavargalai mattum thane sutti kaattinaar. idhil enna thavaru?

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.