தமிழ் அரசியல் கைதிகள் 24 பேரின் வழக்குகள் மன்னார் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளன

அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்துவதாக அரச வழங்கிய வாக்குறுதிக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வெலிக்கடைச் சிறைச்சாலை, அனுராதபுரம், வவுனியா, மன்னார் ஆகிய இடங்களில் விசேட நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.
இதற்கமைவாக கடந்த 15ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட மன்னார் மேல் நீதிமன்றத்துக்கு 24 வழக்குகள் பாரப்படுத்தப்பட்டுள்ளன. அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தும் முதல் நடவடிக்கை இது என்று அரசு கூறுகின்றது.
எஞ்சிய கைதிகளின் வழக்குகளும் விரைவில் விசேட நீதிமன்றங்களில் பாரப்படுத்தப்பட்டு விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் என சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்
தமிழ் அரசியல் கைதிகள் 24 பேரின் வழக்குகள் மன்னார் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளன
Reviewed by NEWMANNAR
on
August 25, 2012
Rating:

No comments:
Post a Comment