வரட்சியினால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்ட விவசாயிகளின் வங்கிக் கடணை இரத்துச் செய்யுமாறு வேண்டுகோள்
'வங்கியில் கடணைப்பெற்று விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள விவசாயிகள் தற்போது நாட்டில் நிலவும் வரட்சி நிலைமை காரணமாக பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் விவசாயிகள் பெற்ற கடன்களை ரத்துச் செய்யுமாறு அரசாங்கம் கோறியுள்ளது போன்று குறித்த கடன்களை பெற்ற விவசாயம் மேற்கொண்ட வன்னி மாவட்ட விவசாயிகளுக்கும் குறித்த நடவடிக்கை அமுல்படுத்தப்பட வேண்டும்' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விவசாயிகள், வங்கியில் இருந்து கடன்களைப்பெற்றும் தமது நகைகளை வங்கியில் அடகு வைத்தும் குறித்த நெற்பயிர்ச்செய்கையினை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக வன்னியிலும் விவசாயிகள் குறித்த நடவடிக்கைகள் மூலம் பணத்தைப் பெற்று நெற்பயிர்ச் செய்கையினை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியின் காரணமாக நெற்பயிர்ச் செய்கைகள் அழிவடைந்த நிலையில் உள்ளன.
எனவே பாதிக்கப்பட்ட தென்பகுதி விவசாயிகளின் வங்கிக்கடன்களை உடன் ரத்துச் செய்யுமாறும் அவர்கள் அடகு வைத்துள்ள நகைகளின் வட்டியினை குறைத்து பெரும் பேக நெற்பயிர்ச் செய்கையின் போது அதனை பெற்றுக்கொள்ளுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கைளை வன்னியில் பதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கும் அமுல்படுத்த வேண்டும் என நான் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
குறித்த வரட்சியின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் 1250 ஏக்கர் நெற்பயிர்ச் செய்கையும், 350 ஏக்கர் ஏணைய பயிர்ச் செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்டத்தில் 926 ஏக்கர் நெற்பயிர்ச் செய்கையும், 185 ஏக்கர் ஏணைய நெற்பயிர்ச் செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 100 வீதம் 16 ஏக்கரும், 50 தொடக்கம் 75 வீதம் வரை 249 ஏக்கரும், 25 தொடக்கம் 1 வீதம் வரை 207 ஏக்கர் நெற்பயிர்ச் செய்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
எனவே ஏனைய மாவட்டங்களிலுள்ள விவசாயிகளுக்கு ஜனாதிபதி அமுல்படுத்தியுள்ளது போன்று வன்னி மாவட்ட விவசாயிகளுக்கும் குறித்த திட்டத்தை உடன் நடைமுறைப்படுத்துமாறு செல்வம் அடைக்கலநாதன் எம்.பி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Reviewed by NEWMANNAR
on
August 30, 2012
Rating:

No comments:
Post a Comment