சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜனனதின விழாக்கள் -- மன்னாரில்!
கிராம மட்டங்களிலும், நகர மட்டத்திலும் கிரமமாக நிகழ்வுகளை நடத்துவதற்கான கலந்துரையாடல் ஒன்றும் சமீபத்தில் இடம்பெற்றது. மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசியக் கல்லூரியில் விழாக்குழுவினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு, கூட்டம் நடாத்தப்பட்டது. இருபதிற்கும் மேற்பட்ட கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான பிரதிநிதிகளும் தெரிவானார்கள். நந்திக்கொடிகள், வாழை தோரணங்கள் சகிதம் அலங்கரிக்கப்படும் வீதிகள் முதலாக, இந்துக்களின் உள்ளத்தில் பேரொளியை தரவல்ல சமய,கலை,பக்தி நிகழ்ச்சிகள்வரை விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிரசன்னத்துடன் திருவாளர்கள்.திருநாவுக்கரசு, தயானந்தராஜா, பிருந்தாவனநாதன், ராமகிருஷ்ணன், நடேசன்,சூரியகுமார் ஆகியோருடன் பல முக்கியஸ்தர்களும் நடத்திய இச் சந்திப்பில் பெருமளவில் ஆர்வலர்கள் கலந்து ஒத்துழைப்பு வழங்கினர்..
சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜனனதின விழாக்கள் -- மன்னாரில்!
Reviewed by NEWMANNAR
on
August 04, 2012
Rating:
No comments:
Post a Comment