மட்டக்களப்பு மாவட்ட விருப்பு வாக்குகளின் விபரம்
கிழக்கு மாகாண சபை தேர்தலின் மட்டக்களப்பு மாவட்ட விருப்பு வாக்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கினங்க, இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் 29,148 வாக்குகளையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. துரைராஜசிங்கம் 27,719 வாக்குகளையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெள்ளிமலை என்று அழைக்கப்படும் ஞா.கிருஷ்ணபிள்ளை 20,200 வாக்குகளையும் வர்த்தகர் இந்திரகுமார் பிரசன்னா 17,304 வாக்குகளையும் முன்னாள் மக்கள் வங்கி முகாமையாளர் மா.நடராசா 16,681 வாக்குகளையும் ஜனா என்று அழைக்கப்படும் கோ.கருணாகரம் 16,536 வாக்குகளையும் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் 22,338 வாக்குகளையும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.அமீரலி 21,271 வாக்குகளையும் பொறியியலாளர் சிப்லி பாரூக் 20,407 வாக்குகளையும், முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் 19,303 வாக்குகளையும் பெற்று மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.
அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அக்கட்சியின் பிரதி தலைவர் ஹாபீஸ் நஷீட் அஹமட் 11,401 வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி 6,436 வாக்குகளை பெற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பட்டியலில் இரண்டாமிடத்தினை பெற்றுள்ளார்.

        Reviewed by NEWMANNAR
        on 
        
September 09, 2012
 
        Rating: 
      
        Reviewed by NEWMANNAR
        on 
        
September 09, 2012
 
        Rating: 

No comments:
Post a Comment