அண்மைய செய்திகள்

recent
-

தவறுகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவதும்,மனிதாவிமானத்தின் முன் திருத்தப்படுவதும் வாழ்வின் ஒரு பக்கம்-எஸ்.வினோ எம்.பி.

தவறு என்பது எல்லா மனிதர்களும் தெரிந்தும்,தெரியாமலும் செய்கின்றதொரு பழக்கம்.அந்த வகையிலே தெரிந்து செய்தாலும்,தொரியாமல் செய்தாலும் சில தவறுகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவதும்,மனிதாவிமானத்தின் முன் திருத்தப்படுவதும் வாழ்வின் ஒரு பக்கமாக உள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.



மன்னார் தோட்டவெளியில் புதிதாக அமைக்கப்பட்ட திருப்பு முனை சிற்ராலயத்திறப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை (11-09-2012) இடம் பெற்ற போது கலந்து கொண்டு சிறப்புரை அற்றுகையிலேயே வினோ எம்.பி அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,,,,

அருட்தந்தையர்களின் இந்த முயற்சி மன்னார் மாவட்டத்தில் உண்மையிலே பல்வேறு வழிகளில் நெறி தவரி,சமூதாயத்தினால் ஒதுக்கப்படுகின்ற கட்டம் வருகின்ற போது அவர்கள் திருத்தப்பட்டவர்களாக,சமூதாயத்தோடும்,சமூகத்தோடும் இந்த வாழ்க்கையை வாழ்கின்ற காலத்தில் பயனுள்ளதாக அமைத்து விடுகின்ற இந்த பாரிய பணியை திருப்பு முனை புதுவாழ்வகமும்,அதில் கடமையாற்றுகின்ற அருட்தந்தையர்களும்,ஏணைய பணியாளர்களும் சிறப்பாக செய்து வருகின்றமை எமக்கு நன்றாக தெரியும்.

எனது நண்பர் ஒருவர் கூட மதுவுக்கு அடிமையாகி இருந்தார்.கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக அவரை பிடிப்பதற்கு திருப்பு முனை புதுவாழ்வகபணியாளர்களும்,அதன் இயக்குனரும் அவரை பிடிப்பதற்கு முயற்சி செய்தனர்.

ஆனால் அவர் ஒழிந்து திறிந்தார்.பின் குறித்த நண்பர் இந்த மையத்தில் வந்து பின் நல்ல மனிதராகவும்,சமூதாயத்தில் ஒரு திருந்திய மனிதராகவும் வாழ்ந்து வருகின்றார்.
இந்த மையமானது நிறந்தரமாக குடி இருக்கின்ற இடம் இல்லை.

மறாக இங்கு வருகின்றவர்கள் மாற்றத்தின் பின் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே இங்கே வருகின்றவர்கள் மீண்டும் வீட்டிற்குச் செல்லுகின்ற போது ஆண்மீக ரீதியாகவும் தங்களை குணப்படுத்தி செல்வதற்கு இந்த திருப்பு முனை சிற்ராலயம் பல்வேறு வகையிலே பொருத்தமானதாக உள்ளதாகவும் வினோ எம்.பி தனது உரையில் மேலும் தெரிவித்தார்.
தவறுகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவதும்,மனிதாவிமானத்தின் முன் திருத்தப்படுவதும் வாழ்வின் ஒரு பக்கம்-எஸ்.வினோ எம்.பி. Reviewed by NEWMANNAR on September 12, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.