மன்னார் சட்டத்தரணிகளின் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது
மன்னார் சட்டத்தரணிகளின் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் மன்னார் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் மீண்டும் இன்று திங்கட்கிழமை வழமைக்குத்திரும்பியது.
மன்னார் நீதிமன்ற கட்டிடம் மீது கடந்த யூலை மாதம் 18 ஆம் திகதி இடம் பெற்ற தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து குறித்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும்,குறித்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுருத்தியும் மன்னார் சட்டத்தரணிகள் கடந்த யூலை மாதம் 19 ஆம் திகதி முதல்(19-07-2012) பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் சுமார் ஒரு மாதங்களுக்கு மேலாக மன்னார் நீதிமன்றத்தில் வழக்குகள் எவையும் விசாரணைக்கு உற்படுத்தப்படாத நிலையில் குறித்த வழக்குகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இருந்தது.
இந்த நிலையில் நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் பலர் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைதாகிய நிலையிலும்,குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் புலன் விசாரணைகளும் திருப்தியடையக்கூடிய வகையில் உள்ளதினால் தாம் தொடர்ந்து மேற்கொண்டு வந்த பணிப்பகிஸ்கரிப்பை இன்று திங்கட்கிழமையுடன் முடிவுக்கு கொண்டு வருவதுடன் இன்று தொடக்கம் வழக்கு விசாரணைகளுக்காக மன்றில் ஆஜராகுவதாக பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வந்த சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
தாம் தொடர்ந்தும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டால் அது மக்களின் நலனை வெகுவாக பாதிக்கும் என்பதனை கருத்தில் கொண்டே இன்று தமது பணிப்பகிஸ்கரிப்பை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
-இன்று பணிப்பகிஸ்கரிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அனைத்து சட்டத்தரணிகளும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் இன்று வழக்குகள் விசாரிக்கப்பட்டது.
நீண்ட நாட்களுக்கு பின் இன்று மன்னார் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம் பெற்றதினால் பெரும் எண்ணிக்கையானவர்கள் மன்றிற்கு சமூகமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் சட்டத்தரணிகளின் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது
Reviewed by NEWMANNAR
on
September 03, 2012
Rating:

No comments:
Post a Comment