அண்மைய செய்திகள்

recent
-

டி மெல் வோட்ஸன் லெம்பேட் இன் மரணத்தில் காவல்துறையின் அசமந்த போக்கும் ஒரு காரணம்.

மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் கடந்த சனிக்கிழமை மதியம் இடம் பெற்ற விபத்தில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் இன் புதல்வரான ஸ்ரான்லி டி மெல் வோட்ஸன் லெம்பேட் (வயது-20) என்பவர் உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்

-ஸ்ரான்லி டி மெல் வோட்ஸன் லெம்பேட் உற்பட மூன்று பேர் கடந்த சனிக்கிழமை மதியம் முச்சக்கர வண்டி ஒன்றில் மன்னாரில் இருந்து தலைமன்னார் காவல்துறை நிலையத்திற்கு சென்று விட்டு மீண்டும் குறித்த 3 இளைஞர்களும் மன்னாரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.இதன் போது குறித்த முச்சக்கர வண்டை ஓட்டியவர் மது போதையில் காணப்பட்டுள்ளார்.இதன் போது தலைமன்னார் காவல்துறை நிலையத்தைச் சேர்ந்த வீதிப்போக்கு வரத்து பிரிவு காவல்துறை அவர்களை இடை மறித்த போது குறித்த முச்சக்கர வண்டியின் சாரதியாக செயற்பட்டவர் மது போதையில் காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த காவல்துறை தமது கடமையை செய்யதா நிலையில் குறித்த சாரதியை ஓட விடாது வேறு யாரையாவது முச்சக்கர வண்டியை ஓட்டும்படி கூறியுள்ளனர்.
இதன் போதே ஸ்ரான்லி டி மெல் வோட்ஸன் லெம்பேட் குறித்த முச்சக்கர வண்டியை ஓடி வந்துள்ளார்.
இதன் போது நடுகுடா சந்தியில் குறித்த முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து பனை மரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன் போது படு காயமடைந்த 3 பேரும் மன்னார் வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்னர்.எனினும் வோட்ஸன் லெம்பேட் இற்கு உட்காயம் அதிகம் காணப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குறித்த விபத்து தொடர்பில் தலைமன்னார் வீதி போக்குவரத்துப்பிரிவு காவல்துறை அறிக்கை ஒன்றை கொடுத்துள்ளனர்.குறித்த அறிக்கையில் மது அருந்தி விட்டு வாகனம் செலுத்தியதினாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையின் ஆரம்பத்தில் விட்ட தவறினால் ஒரு உயிர் இன்று பிரிந்துள்ளது.
குறித்த முச்சக்கர வண்டியில் இருந்த ஏணையவர்களுக்கு முச்சக்கர வண்டி செலுத்தத்தெரியுமா?அல்லது அதற்கான அணுமதிப்பத்திரம் இருக்கின்றதா என்ற விடையங்களை பரிசீலிக்காத குறித்த வீதி போக்குவரத்துப்பிரிவு காவல்துறை இன்னும் எத்தனை உயிர்கள் காவுகொள்ளப்போகின்றது என்ற விடையம் எவருக்கும் தெரியவில்லை.
டி மெல் வோட்ஸன் லெம்பேட் இன் மரணத்தில் காவல்துறையின் அசமந்த போக்கும் ஒரு காரணம். Reviewed by NEWMANNAR on October 08, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.