அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 'வலியின் விம்பங்கள்' கவிதை நூல் வெளியீட்டு விழா-பட இணைப்பு.

  'கலையருவி' எனப்படும் மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு அருட்பணி மையத்தின் வெளியீடாக 'மன்னார் பெனில்' என்பவரின் 'வலியின் விம்பங்கள்' என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.10.2012)  காலை 10.00 மணிக்கு மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
  கலையருவி அமைப்பின் இயக்குனரும் மன்னார் சர்வமதப் பேரவையின் தலைவருமான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முதன்மை விருந்தினராக மன்னார் ஆயர் மேதகு இரா. யோசேப்பு ஆண்டகை அவர்கள் கலந்துகொண்டார். மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்திரு. இ. செபமாலை அவர்கள் இந்நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்தினார். வெளியீட்டுரையை கவிஞர் மயூறன் அவர்கள் நிகழ்த்தினார். பல்துறை வித்தகர் ஆசிரியர் ஏ. நிஷாந்தன் அவர்கள் நூல் மதிப்பீட்டுரையை வழங்கினார்.
  இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சுரேஷ் பிரேமச்சந்திரன், கௌரவ வினோநோகராதலிங்கம், கௌரவ சிவசக்தி ஆனந்தன் மற்றும் மன்னார் நகரபிதா திரு. ஞானப்பிரகாசம், வவுனியா மனிதவள மேம்பாட்டு ஆலோசகர் திரு. சண், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். 
  இக்கவிதை நூலின் ஆசிரியர் பெனில் அவர்கள் தற்போது மன்னார் தோட்டவெளியில் வசிக்கின்றார். 10 வருடங்களுக்கு முன்னார் மரத்தில் இருந்து தவறி விழுந்ததால் முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்பட்டு நெஞ்சுப் பகுதிக்குக் கீழே உணர்விழந்தவராக சிகிச்சைகள் பலனின்றி சக்கர நாற்காலியில்; வாழ்ந்துவருகின்றார். சூரியன் எவ். எம். வானொலியின் ரீங்காரம் என்ற நிகழ்ச்சியில் கவிதைகளை வாசித்து வருகின்றார். அத்துடன் 'சிறகுடைந்த இளஞ்சிட்டு' என்ற பெயரில் மன்னா கத்தோலிக்க பத்திரிகையிலும், 'மன்னார் பெனில்' என்ற பெயரில் வீரகேசரி, மித்திரன், தினமுரச போன்ற பத்திரிகைகளிலும் கவிதைகளை எழுதிவருகின்றார். 
 இந்நூலை வெளிக்கொணர்வதற்கு மன்னார் வர்த்தக சமூகத்தைச் சேர்ந்த அல்போன்ஸ் சம்மாட்டியர் அவர்கள் நிதியுதவி அளித்தமை குறிப்பிடத்தக்கது. 

மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவிகள் இன்னியம் இசைத்து விருந்தினர்களை விழா மண்டபத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.

மன்னார் ஆயர் அவர்கள் மங்கள விளக்கை ஏற்றுகின்றார். 

அருட்தந்தை செபமாலை அவர்கள் வரவேற்புரை நிகழ்த்துகின்றார்.

விழாவுக்கு தலைமைதாங்கிய தமிழ் நேசன் அடிகளார் தலைமையுரை ஆற்றுகின்றார். 

மன்னார் ஆயரிடமிருந்து பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சுரேஷ் பிறேமச்சந்திரன் அவர்கள் நூல் பிரதியைப் பெற்றுக்கொள்கின்றார்.
நூலாசிரியர் பெனில் மேடையில் அமர்ந்திருக்கின்றார். 


மன்னார் ஆயர் நூலாசிரியர் பெனிலுக்கு பொன்னாடை போர்த்துகின்றர்.

ஆசிரியர் நிஷாந்தன் நூல் மதிப்பீட்டுரையை வழங்குகின்றார்.

ஆயர் உரையாற்றுகின்றார். 

நூலாசிரியர் பெனில் உரையாற்றுகின்றார். 

மன்னாரில் 'வலியின் விம்பங்கள்' கவிதை நூல் வெளியீட்டு விழா-பட இணைப்பு. Reviewed by NEWMANNAR on October 08, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.