யாருடைய சலுகைகளும் எமக்கு வேண்டாம் எமது உரிமைகள் தான் எமக்கு வேண்டும்-அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார்
இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்கள் குறிப்பாக யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள் அரசிடமிருந்தோ ஏனைய நிறுவனங்களிடமிருந்து உலக நாடுகளிடமிருந்தோ சலுகைகளை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் தமது உரிமைகளைத்தான் எதிர்பார்க்கின்றார்கள் என அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் தெரிவித்தார்.
மக்கள் மத்தியில் புரிந்துணர்வையும், உறவையும் கட்டி எழுப்பும் நோக்கோடு தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் அம்பாந்தோட்டை, நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த 12 பேர்கொண்ட மக்கள் பேரவை உறுப்பினர்கள் மன்னாருக்கு விஜயம் செய்திருந்தனர். நேற்று வியாழக்கிழமை (22.11.2012) மன்னார் ஆர்.பி. ஆர். நிறுவனத்தில் மன்னார் மக்கள் பேரவையினரைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இக்கலந்துரையாடலுக்கு தலைமை வகித்து உரையாற்றியபோதே மன்னார் மக்கள் பேரவையின் தலைவர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலின்போது இன்று வடகிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும், குறிப்பாக மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் எடுத்துக்கூறப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய தமிழ் நேசன் அடிகளார் தொடர்ந்து கூறியதாவது, இன்று யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்களாகிய பின்னரும் யுத்தத்தின் பாதிப்புக்களிலிருந்து மக்கள் இன்னும் விடுபடவில்லை. யுத்தத்தின் சத்தங்கள் ஓய்ந்துவிட்டன. ஆனால் யுத்தத்தின் வலிகள் இன்னும் ஆறவில்லை. இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் இன்னும் குடியமர்த்தப்படவில்லை. முகாம்களில் இருந்த அவர்கள் காடுகளுக்குள் கொண்டுபோய் விடப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கென சொந்தமான வீட்டுக்காணிகள், தோட்டக்காணிகள், வயல் காணிகள் இருந்தும் அவர்கள் தமது சொந்த இடங்களில் குடியேற அனுமதி மறுக்கப்படுகிறது. மிதிவெடி அகற்றப்படவில்லை என்று காரணம் சொல்லப்படுகின்றது. ஆனால் மிதிவெடி அகற்றப்பட்டுள்ள இடங்களிலும் இந்த மக்கள் குடியேற அனுமதிப்படவில்லை என்பதே உண்மை நிலையாக இருக்கின்றது. தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளைத்தான் எதிர்பார்க்கின்றார்கள்.
தமிழ் மக்களோ அல்லது முஸ்லிம் மக்களோ இந்த நாட்டில் இரட்டாம்தரப் பிரஜைகள் அல்லர். பெரும்பான்மை இன மக்களைப் போன்று அவர்களும் இந்த அனைத்து உரிமைகளையும் அனுபவிக்கின்ற மக்களாக சமமாக நடத்தப்படவேண்டும். இதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். என தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
November 23, 2012
Rating:
No comments:
Post a Comment