மன்னார் மாவட்டத்தில் இந்திய வீட்டுத்திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவில் ஆளுங்கட்சி அரசியல் ரீதியாக தெரிவுகள்-பாதிக்கப்பட்ட மக்கள் விசனம்
இந்திய அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இந்திய வீட்டுத்திட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் பயனாளிகள் தெரிவின் போது ஆளுங்கட்சி அமைச்சர்களின் ஆதரவாளர்களுடைய கிராமங்களில் உள்ள மக்களே அதிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குறைந்த அளவிலேயே தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்திய அரசினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் அனைத்தும் யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதேயாகும். ஆனால் குறித்த வீட்டுத்திட்டங்களில் அதிகமானவை ஆளுங்கட்சி அமைச்சர்களின் ஆதரவாளர்களுக்கும்,ஆளுங்கட்சியில் அரசியல் செல்வாக்கு மிக்க கிராமங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும்,உண்மையிலேயே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட,வீடுகளை இழந்த,இடம் பெயர்ந்த மக்கள் பலர் இந்த வீட்டுத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டதன் அளவு மிகவும் குறைவான நிலையிலே காணப்படுவதாகவும் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இவ்வாறான நிலை காணப்படுவதாக சமூக ஆர்வளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன் தற்போது தெரிவு செய்யப்பட்ட கிராமங்கள் சில புள்ளி விபர சமூக அடிப்படையில் தெரிவு செய்யப்படாமையினால் குறித்த கிராமங்கள் மாற்றப்பட்டு புதிதாக கிராமங்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும் பாதீக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வீட்டுத்திட்டம் தொடர்பான பிரச்சினைகளில் இந்திய தூதரகம் தலையிட்டு கவனம் செலுத்தி நீதியான முறையில் பயனாளிகள் தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும்,அரசியல் ரீதியான தெரிவு நீக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்திய அரசினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் அனைத்தும் யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதேயாகும். ஆனால் குறித்த வீட்டுத்திட்டங்களில் அதிகமானவை ஆளுங்கட்சி அமைச்சர்களின் ஆதரவாளர்களுக்கும்,ஆளுங்கட்சியில் அரசியல் செல்வாக்கு மிக்க கிராமங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும்,உண்மையிலேயே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட,வீடுகளை இழந்த,இடம் பெயர்ந்த மக்கள் பலர் இந்த வீட்டுத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டதன் அளவு மிகவும் குறைவான நிலையிலே காணப்படுவதாகவும் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இவ்வாறான நிலை காணப்படுவதாக சமூக ஆர்வளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன் தற்போது தெரிவு செய்யப்பட்ட கிராமங்கள் சில புள்ளி விபர சமூக அடிப்படையில் தெரிவு செய்யப்படாமையினால் குறித்த கிராமங்கள் மாற்றப்பட்டு புதிதாக கிராமங்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும் பாதீக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வீட்டுத்திட்டம் தொடர்பான பிரச்சினைகளில் இந்திய தூதரகம் தலையிட்டு கவனம் செலுத்தி நீதியான முறையில் பயனாளிகள் தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும்,அரசியல் ரீதியான தெரிவு நீக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் இந்திய வீட்டுத்திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவில் ஆளுங்கட்சி அரசியல் ரீதியாக தெரிவுகள்-பாதிக்கப்பட்ட மக்கள் விசனம்
Reviewed by NEWMANNAR
on
November 23, 2012
Rating:

No comments:
Post a Comment