தலைமன்னாரில் 2 கோடி 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது.
மன்னார் தலைமன்னார் பகுதியில் சுமார் 2 கோடி 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் மன்னரைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை நேற்று சனிக்கிழமை தலைமன்னார் பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் தெரிவித்தார்.
தலைமன்னார் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத்தகவலை தொடர்ந்து தலைமன்னார் பொலிஸாரும்,மன்னார் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு பொலிஸாரும் இணைந்து நேற்று சனிக்கிழமை அதிகாலை தலைமன்னார் நடுக்குடா பிரதான வீதியில் வைத்து குறித்த குடும்பஸ்தரை கைது செய்துள்ளனர்.
அவரிடம் இருந்து 2 கிலோ 250 கிராம் எடை கொண்ட ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதன் பெறுமதி 2 கோடி 25 இலட்சம் என தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது குறித்த சந்தேக நபரை தலைமன்னார் பொலிhர் தடுத்து வைத்து விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைமன்னாரில் 2 கோடி 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது.
Reviewed by NEWMANNAR
on
December 16, 2012
Rating:
No comments:
Post a Comment