தென் பகுதி இளைஞர் கொலை தொடர்பில் சக தென்பகுதி பணியாளர்களிடம் விசாரனை
மன்னார் உப்புக்குளம் பிரதான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இடம் பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் சக பணியாளர்கள் சிலர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகள் இடம் பெற்று வருவதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார் பிரதேச நில அளவை அலுவலகத்தில் கடமையாற்றும் தென் பகுதியைச் சேர்ந்த நாமல் சோமரத்தின (வயது-32) என்ற இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டு எரியூட்டப்ட்டுள்ளார்.
மன்னார் உப்புக்குளம் பிரதான வீதியில் குறித்த அலுவலகம் அமைந்துள்ளது.அதற்கு முன்பாக இந்த அலுவலகத்தில் கடமையாற்றுகின்ற பணியாளர்கள் வீட்டை வாடகைக்கு அமர்த்தி வசித்து வந்தனர்.
-சம்பவம் நேற்று முந்தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம் பெற்றிருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகள் மூலம் தெரிய வந்துள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு சண்டை பிடித்து,கத்தி சத்தம் கேட்டதாக அருகில் உள்ள வீட்டுக்காரர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை காலை குறித்த இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்டு அரை குறையாக எரியூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டார்.ஆனால் இவருடன் இருந்த சக பணியாளர்கள் எவ்வித அறிவித்தல்களும் இன்றி தமது ஊருக்குச் சென்று விட்டனர்.
இதனால் இக்கொலை சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.குறித்த கொலையினை தனி நபர் ஒருவரினால் செய்திருகக முடியாது என்பதனை பொலிஸாரும் ,புலனாய்வுத்துரையினரும் அறிந்து கொண்டனர்.இந்த நிலையில் உயிரிழந்த இளைஞருடன் குறித்த வீட்டில் தங்கியிருந்த அணைவருக்கும் உடன் தகவல் வழங்கப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் நேற்று சனிக்கிழமை மாலை மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில் மன்னார் பொலிஸார் குறித்த சக பணியாளர்களிடம் புலன் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த கொலைச்சம்பவம் மன்னார் நகர மக்களை பாரிய அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.சம்பவம் இடம் பெற்ற பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தென் பகுதி இளைஞர் கொலை தொடர்பில் சக தென்பகுதி பணியாளர்களிடம் விசாரனை
Reviewed by NEWMANNAR
on
December 09, 2012
Rating:
No comments:
Post a Comment