தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு மன்னாரில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி
தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஏற்பாடு செய்திருந்த மாபெரும் விழிப்புணர்வு பேரணி இன்று காலை மன்னாரில் இடம்பெற்றது.
-மன்னார்-தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன் இன்று காலை 6.45 காலை மணிக்கு குறித்த பேரணி ஆரம்பமானது.
குறித்த பேரணியானது பிரதான வீதியூடாக சென்று மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது.பின் மீண்டும் வைத்தியசாலை வீதியூடாக சென்று மீண்டும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினை சென்றடைந்தது.இதன் போது பலர் லந்து கொண்டதோடு விளிர்ப்புனர்வு பதாதைகளையும் ஏந்தியவாறு பேரணியில் சென்றனர்.
தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு மன்னாரில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி
Reviewed by NEWMANNAR
on
December 12, 2012
Rating:
No comments:
Post a Comment