மன்னார் மாவட்ட மீனவ அபிவிருத்திக்குழு கூட்டம்
மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம்,
மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் மெரான்டா, உதவி அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், தேசிய மீனவ ஒத்துழைப்புப் பேரவையின் இணைப்பாளர், இராணுவத்தினர், பொலிஸார், கடற்படை உயரதிகாரிகள், மன்னார் மாவட்ட மீனவச் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.
கடலினுள் பற்றை வைத்து கணவாய் பிடித்தல், பட்டிவலை மூலம் மீன்பிடித்தல் போன்ற செயற்பாடுகளால் ஏற்படும் நன்மை, தீமைகள் தொடர்பில் மீனவர்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
கணவாய் பிடிப்பதற்காக கடலினுள் பற்றையை வைத்து விட்டு ஜீ.பி.எஸ். என்னும் தொழில்நுட்;பக் கருவியை பயன்;படுத்தி குறித்த இடங்களை மீண்டும் அடையாளம் கண்டு கணவாய் பிடிக்கின்றனர். இதனால் குறித்த கணவாய் பிடிக்கும் தொழிலாளர்களுக்கு உபகரணச் செலவு மிகவும் குறைந்தளவிலேயே காணப்படுகின்றது.
ஆனால் பல இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகளை கொள்வனவு செய்து கடற்றொழிலில் ஈடுபடுகின்றபோது அவ்வலைகள் கணவாய் பிடிப்பதற்காக வைக்கப்படுகின்ற பற்றைகளில் சிக்கி வலை அறுந்துபோவதாகவும் இதனால் தாங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் மீனவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதேவேளை, கடற்கரையோரங்களில் பட்டி வைத்து தொழில் செய்வதால் கரைவலை தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது
மன்னார் மாவட்ட மீனவ அபிவிருத்திக்குழு கூட்டம்
Reviewed by NEWMANNAR
on
January 29, 2013
Rating:
No comments:
Post a Comment