மன்னார் அன்பு சகோதரர் சிறுவர் இல்ல மாணவன் பல்கலைக்கழகம் தெரிவு
மன்னார் கீரியில் அமைந்துள்ள அன்பு சகோதரர் சிறுவர் இல்லத்தை சேர்ந்த மாணவன் வி. டேவிட் பிறேம்குமார் 2012  ஆகஸ்ரில்  நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில்1A, 2B பெறுபேற்றைப் பெற்று மாவட்டத்தில் 18 வது இடத்தைப் பெற்றுள்ளார்.
அன்பு சகோதரர் சிறுவர் இல்லமானது கடந்த 12 வருடகாலமாக ஆதரவற்ற வறிய சிறுவர்களையும், போரினால் பாதிப்படைந்த சிறுவர்களையும், பெற்றோரை இழந்த சிறுவர்களையும், சமுக பாதுகாப்பற்ற சிறுவர்களையும், பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் மாவட்ட நீதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மன்னார் மாவட்ட சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின்; மேற்பார்வையின் கீழ் பராமரித்து வருகின்றது. இங்கு தற்போது தரம் 03 இல் இருந்து உயர்தரத்தில் விஞ்ஞான வர்த்தக கலைத்துறை வரை கல்வி கற்கும் 18 மாணவர்கள்  பராமரிக்கப்படுகின்றனர். 
மேலும் பல வறிய மாணவர்களை குடும்;பச் சூழலுடன் இணைத்து பராமரிப்பதற்கான முழுமையான உதவிகள் (Education support programme) வழங்கப்படுகின்றன. கடந்த காலங்களில் பல  மாணவர்கள் எமது இல்லத்தினால் பராமரிக்கப்பட்டு  கல்வி, தொழில் பயிற்சி மற்றும் சுயதொழில் ரீதியாக பயிற்றுவிக்கப்பட்டு  அவர்களின் குடும்பங்களுடன்  இணைப்புச் செய்யப்பட்டுள்ளனர். 
எமது இல்லத்துக்கு பல்வேறு வழிகளிலும் உதவி புரிகின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் நமது நன்றிகளை தெரிவித்து நிற்கின்றோம்.  
மன்னார் அன்பு சகோதரர் சிறுவர் இல்ல மாணவன் பல்கலைக்கழகம் தெரிவு
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
February 16, 2013
 
        Rating: 
      
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
February 16, 2013
 
        Rating: 






No comments:
Post a Comment