அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சேவலங்கா நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட பாடசாலைக்கட்டிடம் திறந்து வைப்பு.

மன்னார் சேவலங்கா நிறுவனத்தின் அமுலாக்கத்துடன் ஜேர்மன் நாட்டில் இயங்கும் தோமஸ் குக் மற்றும் வெல்த் கங்கர் கில்பி ஆகிய இரு அமைப்புக்களின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட மன்-வேப்பங்குளம் அரசினர் முஸ்ஸிம் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்ட பாடசாலை கட்டிடம் இன்று வெள்ளிக்கிழமை காலை நிதி வழங்குனர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் சேவலங்கா அமைப்பின் மாவட்ட நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் ஏ.குபேரகுமார் கஸ்மீர் தெரிவித்தார்.


 குறித்த பாடசாலையில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் நிதி வழங்குனர்கன தோமஸ் குக் ஜேர்மன் அமைப்பின் பிரதி நிதி யூலியன் கிலமன்ஸ் மற்றும் வெல்த் கங்கர் கில்பி அமைப்பின் பிரதிநிதிகளான செசாரி,பாலு,வீரா ஆகியோர் இணைந்து குறித்த பாடசாலைக்கட்டிடத்தினை திறந்து வைத்தனர்.

 இதன் போது சேவலங்கா அமைப்பின் விசேட திட்ட பணிப்பாளர் அனற் றொய்ஸ்,மன்னார் வலயக்கல்விப்பனிப்பாளர் எம்.எம்.சியான்,முசலி பிரதேச சபை உறுப்பினர்,மன்னார் சேவலங்கா அமைப்பின் பனியாளர்கள் உற்பட பலர் கலந்து கொண்டிருந்ததாக சேவலங்கா அமைப்பின் மாவட்ட நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் ஏ.குபேரகுமார் கஸ்மீர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் சேவலங்கா நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட பாடசாலைக்கட்டிடம் திறந்து வைப்பு. Reviewed by Admin on February 22, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.