மன்னாரில் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையிலேயே மன்னாரின் எதிர்காலம் தங்கியுள்ளது.
அன்பான தமிழ் முஸ்லிம் மக்களே!
மன்னார் மாவட்டத்தில் தமிழர்களும்,முஸ்லிம்களும் வரலாற்றுக்காலம் தொடங்கி மிகவும் ஒற்றுமையாக ஒரு தாய் பெற்ற பிள்ளைகள் போல வாழ்ந்திருக்கிறார்கள் இதை எமது மூதாதையர்கள் மூலம் செவிவழியாக அறிந்திருக்கிறோம்.தமிழ்த்தாயின் முக்குழந்தைகளில் தமிழ்மொழி பேசும் முஸ்லிம்களும் அடங்குவர்.
தமிழருக்கு அநியாயம் செய்துவி;ட்டு நாம் மட்டும் இங்கு மகிழ்வாக வாழ்வோம் என்ற எண்ணம் முஸ்லிம்களிடமோ அல்லது முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்துவிட்டு நாம் மட்டும் நிம்மதியாக வாழ்வோம் என்ற எண்ணம் தமிழர்களிடமோ இருக்கமுடியாது.
தமிழர்களின் சுகதுக்கங்களில் முஸ்லிம்கள் ;பங்குபற்றுவதையும் ,முஸ்லிம்களின் சுகதுக்கங்களில் தமிழர்கள் பங்குபற்றுவதையும் எம்மால் ஒருபோதும் மறுக்கமுடியாது.1990ல் நிகழ்ந்த துன்பியல் நிகழ்வால் தமிழ்,முஸ்லிம் உறவில் சிறுஇடைவெளி ஏற்பட்டதேயொழிய உறவு முறிவடையவில்லை.தற்போது தமிழ் முஸ்லிம் உறவு சிறப்பாக வளர்ந்து வருகின்றது.
இவ்வுறவைப்பொறுத்துக் கொள்ளாத சில சுயநல அரசியல்வாதிகளும்,சில சமய அடிப்படைவாதிகளும் பல கோணங்களில் இவ்வுறவைச்சிதைப்பதற்காக பகீரதப்பிரயத்தனம் மேற்கொள்கின்றனர்.இவ்விடயத்தில் எம் இரு சமூகங்களும் மிகவும் அவதானமாகவும்,எச்சரிக்கையுடனும் நடந்துகொள்ளவேண்டும்.இரு இன தனிநபர்களிடையே ஏற்படும் சிறிய பிணக்குகளை பாரிய ஒரு இனமோதலாகச்சித்திரிக்க ஊடகங்கள் முயற்சி செய்யக்கூடாது.
மன்னாரில் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையிலேயே மன்னாரின் எதிர்காலம் தங்கியுள்ளது.

( முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்)
மன்னாரில் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையிலேயே மன்னாரின் எதிர்காலம் தங்கியுள்ளது.
Reviewed by NEWMANNAR
on
March 19, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment