அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய பிரபல விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை.

 மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றுக்கு எதிராக கிடைக்க பெற்ற பொது மக்களின் முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையை அடுத்து குறித்த விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


 மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன்   லெம்பேட் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இன்றைய தினம் (27) மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


குறித்த விற்பனை நிலையத்தில்  காலாவதியான பொருட்கள் காட்சி படுத்தப்பட்டிருந்த தன் அடிப்படையிலும் அழுகிய பழங்கள், மரக்கறிகள் விற்பனைக்காக வைத்திருந்த தன் அடிப்படையிலும், களஞ்சிய சாலை சுகாதாரமான முறையின் பேணப்படமையின் அடிப்படையிலும் விற்பனை நிலையத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கைப்பற்றப்பட்ட உணவு பொருட்கள் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்டு அழிக்கப்பட உள்ளதுடன் விற்பனை நிலையத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஏனைய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரை  களஞ்சிய சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.











மன்னாரில் காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய பிரபல விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை. Reviewed by Vijithan on February 27, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.