அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பெண்களின் தலைமைத்துவத்தை விருத்தி செய்வது தொடர்பான கருத்தரங்கு.படங்கள்


மன்னார் சர்வோதைய அமைப்பின் ஏற்பாட்டில் பெண்களின் தலைமைத்துவத்தை விருத்தி செய்வதன் மூலம் பெண்கள் அரசியலில் ஈடுபடுவது தொடர்பான கருத்தரங்கு நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் சர்வோதைய அமைப்பின் அலுவலகத்தில் இடம் பெற்றது
.

-மன்னார் சர்வோதைய அமைப்பின் இணைப்பாளர் சிறினிவாசன் யுகேந்திரா தலைமையில் இடம் பெற்ற குறித்த கருத்தரங்கில் மன்னார்,நானாட்டான்  ஆகிய இரு பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 40 பேர் கலந்து கொண்டனர்.

இதன் போது பெண்கள் இது வரை அரசியலில் ஈடுபடுகின்றமை குறைந்தளவில் காணப்படுவதற்காண காரணம் என்ன?பெண்கள் அரசியலில் ஈடுபடுகின்ற போது அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண என்ன செய்ய வேண்டும் என்ற விடையங்கள் ஆராயப்பட்டது.







-குறித்த கருத்தரங்கில்   சர்வோதைய அமைப்பின்   சமூக வேளைத்திட்ட இணைப்பாளர் எஸ்.கணேஸ்,சர்வோதைய மகளிர் இயக்க பணிப்பாளர் தயானி கிரேறா,சர்வோதைய மகளிர் இயக்க உப தலைவர் விமல ரணதூங்க,சர்வோதைய மகளிர் இயக்க உப செயலாளர் அன்னபூரானி,வளவாளர் ஜெசி ஆரியரட்னம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News  by:-s.sutharsan
மன்னாரில் பெண்களின் தலைமைத்துவத்தை விருத்தி செய்வது தொடர்பான கருத்தரங்கு.படங்கள் Reviewed by NEWMANNAR on March 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.