பிரேரணையின் இறுதி வரைவு கடுமையானதாகவே இருக்கும்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 22 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்றது. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு எதிரான பிரேரணையின் நகல் அமெரிக்காவால் கடந்த வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளுக்கு கையளிக்கப்பட்டுள்ள பிரேரணையின் நகலில், இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று நேரடியாக எதுவும் தெரிவிக்கப்படாததுடன், பிரேரணையை நடைமுறைப்படுத்த நீண்டகால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் கேட்டபோது, "அமெரிக்காவால் தற்போது பிரேரணையின் நகலே சமர்ப்பிக்கப்பட்டுபுள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாகத் தெரிவிக்க விரும்பவில்லை. ஏனெனில் இது நகல்தான்.
இது உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்பட்டு அவர்களால் மாற்றியமைக்கப்படலாம். அதன்பின்னரே இறுதிப் பிரேரணை சமர்ப்பிக்கப்படும். அந்த இறுதி விசாரணை இலங்கைக்கு எதிரான, வலுவுள்ளதொன்றாக அமையும் என்றே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இறுதிப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் எங்களின் கருத்துகளை பகிரங்கமாகத் தெரிவிப்போம்''என்றார்.
பிரேரணையின் இறுதி வரைவு கடுமையானதாகவே இருக்கும்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை
Reviewed by Admin
on
March 10, 2013
Rating:

No comments:
Post a Comment