மன்னார் மாவட்டத்தில் ஆடை தொழில்துறையில் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுப்பது சம்மந்தமான கலந்துரையாடல்
மன்னார் மாவட்டத்தில் ஆடை தொழில்துறையில் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுப்பது சம்மந்தமான கலந்துரையாடல் இடம்பெற்றது.இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வணிகதுறை அமைச்சர் கௌரவ றிஸாட் பதீயுதீன் அவரின் பணிப்புரைக்கு அமைவாக அமைச்சரின் இணைப்பு செயலாளர் அலிகான் சரீப் கலந்து கொண்டார்.
மன்னார் மாவட்டத்தில் அமைக்க உள்ள இந்த ஆடைதொழிற்சாலைக்கு 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து மொத்தமாக 1000 பேர் சேர்த்து கொள்ளப்பட உள்ளனர்.இத் தொழிற்சாலையினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள படித்து விட்டு விட்டில் இருக்கும் யுவதிகள் அதிகமான நன்மை அடைவார்கள் இக் கலந்துரையாடலுக்கு நானாட்டன் பிரதேச சபை உறுப்பினர் சகாப்தீன் மற்றும் பிரதேச சபை செயலாளர் இன்னும் நானாட்டன் அபிவிருத்தி குழுவின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.மேலும் பிரதேசத்தில் இருந்து சுமார் 480 அதிகமான படித்த தமிழ் யுவதிகள் வருகைதந்திருந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் ஆடை தொழில்துறையில் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுப்பது சம்மந்தமான கலந்துரையாடல்
Reviewed by Admin
on
March 04, 2013
Rating:

No comments:
Post a Comment