ஐ.நா பிரேரணைக்கு எதிர்ப்புத்தெரிவித்து மன்னாரில் பேரணி.
மன்னார் மாவட்ட சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த பேரணியின் போது மன்னார் வாழ் தமிழ் மக்கள் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது காலை 10.30 மணியளவில் மன்னார் பிரதான பால வீதியில் குறித்த பேரணி ஆரம்பமானது.இதன் போது கலந்து கொண்ட மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் புகைப்படத்தை ஏந்தியாறு சென்றனர். பேரணியில் கலந்து கொண்ட மக்கள் பதாதைகளை ஏந்திவாறு பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு சென்றனர்.
நாட்டின் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஸவா குற்றவாளி??, அபிவிருத்தியின் தலைவர் ஜனாதிபதி,ஐ.நா பிரேரணையே ஒழிக போன்ற கோசங்களை எழுப்பியவாறு சென்றனர்.
ஊர்வலம் பிரதான வீதியூடாக சென்று மன்னார் அரச தரிப்பிடத்தை சென்றடைந்தது. இதன் போது மன்னார் மாவட்ட சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஐ.நா பிரேரணைக்கு எதிர்ப்புத்தெரிவித்து மன்னாரில் பேரணி.
Reviewed by Admin
on
March 04, 2013
Rating:
No comments:
Post a Comment