மன்னார், வவுனியாவில் இராணுவத்திற்கு பெண்களை சேர்ப்பதற்கான நேர்முகத்தேர்வு
இது தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் இராணுவத்தினரால் வெளியிடப்பட்டுள்ளன.
சிவில் நிர்வாகப் பணிகளுக்கு திறமையான யுவதிகளை இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணிக்கு சேர்த்துக் கொள்ளும் முகமாகவே இந்த நேர்முகத்தேர்வுகள் நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், மன்னார் தள்ளாடி இராணுவ தலைமைச் செயலகத்தில் நேற்று புதன்கிழமை இதற்கான நேர்முகத்தேர்வு நடைபெற்றது.
இதன்போது மன்னார், நானாட்டான், அடம்பன், சன்னார் ,பெரியமடு, ஈச்சலவக்கை போன்ற கிராமங்களைச் சேர்ந்த சுமார் 20 யுவதிகள் இந்த நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டதாக மன்னார், தள்ளாடி இராணுவ தலைமைச் செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், மடு இராணுவ முகாமில் இன்று வியாழக்கிழமை இதற்கான நேர்முகத்தேர்வு நடைபெறுகின்றது.
வவுனியா நகர இராணுவ முகாமில் நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணியிலிருந்து 12 மணிவரையும் வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியில் நாளைமறுதினம் சனிக்கிழமை பிற்பகல் 2 மணியிலிருந்து மாலை 5 மணிவரையும் இதற்கான நேர்முகத்தேர்வுகள் நடைபெறவுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த யுவதிகள் வசிக்கும் பிரதேசத்தில் கடமையாற்றுவதற்கும் சிவில் நிர்வாக பணிகளுக்கு திறமையான யுவதிகளை இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணிக்கு சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் மாத சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகள் உட்பட மாதாந்தம் 35,000 ரூபாவுக்கு மேற்பட்ட தொகை வழங்கப்படும் என உள்ளிட்ட விடயங்கள் அந்த துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மன்னார், வவுனியாவில் இராணுவத்திற்கு பெண்களை சேர்ப்பதற்கான நேர்முகத்தேர்வு
Reviewed by Admin
on
March 21, 2013
Rating:
No comments:
Post a Comment