அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக நுழைந்த அறுவர் தலைமன்னாரில் கைது

இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறப்படும் 6 பேரை மன்னார் கடற்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் கைதுசெய்துள்ளனர். 

இரண்டு இந்தியர்களும் நான்கு இலங்கையர்களுமே தலைமன்னார், மண்திட்டு பகுதியில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்தனர். 


1990ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து இந்தியா சென்ற இலங்கையர்களே மீண்டும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு படகு மூலம் தலைமன்னார் நோக்கி வந்தபோது கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இந்த நான்கு இலங்கையர்களும்; மன்னாரில் எழுத்தூர் சரவண்கோட்டை, உயிர்த்தராசன்குளம், உப்புக்குளம் மற்றும் கதிர்காமர் மாவத்தை மிதிரிஹம பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

கைதுசெய்யப்பட்ட இரண்டு இந்தியர்களும் இந்தியாவின் இராமநாதபுரத்தைச் சேர்ந்த படகோட்டிகள் ஆவார் எனவும் பொலிஸார் கூறினர். 

இந்த நான்கு இலங்கையர்களும் இந்தியாவின் தமிழ்நாட்டில் வாழ்ந்துவந்துள்ளதாகத் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

கைதுசெய்யப்பட்ட 6 பேரையும்  தலைமன்னார் பொலிஸில் கடற்படையினர் ஒப்படைத்துள்ள நிலையில், அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர். 


இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக நுழைந்த அறுவர் தலைமன்னாரில் கைது Reviewed by Admin on March 05, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.