இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் பெண்கள் இன்று முதல் கடமையில்
அண்மையில் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட வடக்கு தமிழ் பெண்கள் இன்று முதல் இராணுவச் சிப்பாய்களாக கடமையாற்றவுள்ளனர்.
95 தமிழ் யுவதிகள் இவ்வாறு இராணுவ சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
நான்கு மாதங்கள் இராணுவப் பயிற்சியை பூர்த்தி செய்த குறித்த வடக்கு தமிழ் யுவதிகள் கிளிநொச்சியில் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பயிற்சியை பூர்த்தி செய்த குறித்த பெண் வீராங்கணைகளின் கலைந்து செல்லும் நிகழ்வு இன்று கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக பிரிகேடியர் ரத்னசிங்கம் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் பெண்கள் இன்று முதல் கடமையில்
Reviewed by Admin
on
March 21, 2013
Rating:

No comments:
Post a Comment