மன்னார் மாவட்டத்துக்கு சூரிய மின் சக்தி

மன்னார் மாவட்டத்திலுள்ள சுமார் 50,000 ஏக்கர் விவசாயக் காணிகளுக்கு 160 நீர்த்தேக்கங்களிலிருந்து நீரை வழங்குவதற்கு சூரிய மின் சக்தியானது பயன்படுத்தப்படும் என மன்னார் மாவட்ட நீர்ப்பாசனப் பிரதான பொறியியலாளர் பாலித்த விக்கரம திலக்க தெரிவித்துள்ளார்.
பொறியியலாளர் விக்ரம திலக்க குறிப்பிடும்போது விவசாய நோக்குடனும் ஏனைய உள் நாட்டுத் தேவைகளுக்காகவும் ஜப்பானானது சூரிய மின்சாரத்தைப் பயன்படுத்தி துரித அபிவிருத்தி அடைந்துவருவதை நாம் அவதானித்திருக்கின்றோம்,எனவே மன்னார் மாவட்டத்தில் சூரிய மின் சாரத்தைப் பயன்படுத்த விரிவான முறையில் ஆராய்ந்து வருகின்றோம் எனத்தெரிவித்தார்.
மூன்றரை கி.மீ நீளமான நீர்த்தேக்கமொன்றைக் கட்டுவதன் மூலம் நவம்பர், டிசம்பர் போன்ற காலங்களில் செக்கனுக்கு 1,50,000 கண அடி நீரை வெளிப் பாய்ச்சக்கூடியதாக இருக்கும்.அத்துடன் திட்டமிடப்பட்டிருக்கும் நீர்த் தேக்கத்திலிருந்து வவுனியாவுக்கும் குடி நீரை வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது அரசு கட்டம் கட்டமாக இத்திட்டத்திற்காக நிதி வழங்கவுள்ளதாகவும் பொறியியலாளர் மேலும் குறிப்பிட்டார்.
மன்னார் மாவட்டத்துக்கு சூரிய மின் சக்தி
Reviewed by NEWMANNAR
on
April 10, 2013
Rating:

No comments:
Post a Comment