இந்திய கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினரே எங்களை கைது செய்தனர்-சிறைவைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் தெரிவிப்பு
அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளை கடந்த சனிக்கிழமை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் சென்ற விசேட குழு அவர்களை சந்தித்து உரையாடியதாக மன்னார் நகர சபையின் உறுப்பின் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.
.அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற குறித்த குழுவினர் சிறை வைக்கப்பட்டுள்ள 19 இந்திய மீனவர்களை முதலில் சந்தித்து அவர்களுடன் உரையாடியுள்ளதோடு அத்தியாவசிய உதவிகளையும் வழங்கியுள்ளனர்.
இதன் போது மீனவர்களுக்கு சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக மீனவர்கள் குறித்த குழுவிடம் தெரிவித்தனர்.
இதே வேளை தாங்கள் இலங்கை கடற்படப்பிற்குள் நுழையவில்லை எனவும்,எமது கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினரே எம்மை கைது செய்து சென்றதாக அந்த மீனவர்கள் குறித்த குழுவிடம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைவதினால் எமது மீனவர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் குறித்த குழுவினர் இந்திய மீனவர்களுக்கு தெழிவு படுத்தினர்.
இதே வேளை குறித்த குழுவினர் அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகள் 31 பேரை சந்தித்து உரையாடியுள்ளனர். இந்த நிலையில் அரசியல் கைதிகள் தமது விடுதலை தொடர்பாக சட்ட விடையங்களை மேற்கொண்டு தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதே வேளை சிறைச்சாலையில் மலசல கூட பிரச்சினை இருப்பதாகவும் தாங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் அரசியல் கைதிகள் குறித்த குழுவிடம் சென்றனர்.
இந்த நிலையில் சிறைச்சாலையில் கைதிகள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.
குறித்த குழுவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்கி ஆனந்தன்,மன்னார் பிரஜைகள் குழுவின் அதிகாரிகள்,தேசிய மீனவ ஒத்துளைப்பு பேரவையின் வட மாகாண இணைப்பாளர் ஏ.யேசுதாஸ்,மன்னார் மாவட்ட இணைப்பாளர் சுனேஸ் சோசை ,மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம் ஆகியோர் உள்ளடங்குவதாக மன்னார் நகர சபையின் உறுப்பின் இரட்ணசிங்கம் குமரேஸ் மேலும் தெரிவித்தார்.
மன்னார் நிருபர்
இந்திய கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினரே எங்களை கைது செய்தனர்-சிறைவைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் தெரிவிப்பு
Reviewed by NEWMANNAR
on
April 10, 2013
Rating:

No comments:
Post a Comment