வடக்கில் இடம் பெயர்ந்த அனைத்து தமிழ் மக்களையும் அவர்களது பிரதேசங்களில் மீள்குடியமர்த்தியுள்ளோம்.-ஜனாதிபதி

மணித்தியாலயங்களில் வடக்கிலிருந்து இடம் பெயர்க்கப்பட்டதாக கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த அனைத்து மக்களையும் அவர்களது மண்ணில் மீள்குடியேற்றுவோம் என்றும் கூறினார்.
முல்லைத்தீவு மாவட்ட வெலிஓய(மணலாறு) பிரதேசத்தில் மீள்குடியமரும் மக்களுக்கான காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு இன்று வெலிஒயா பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற போது ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வாஇறிசாத் பதியுதீன்இதிஸ்ஸ கரலியத்தஇகுணரத்ன வீரகோன்இபிரதி அமைச்சர்களான எஸ்.எம்.சந்திரசேன.டீ.பி.ஏக்கநாயக்க.வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்இவடமாகாண ஆளுநர் சந்திரசிறி உட்பட பலரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.
மேலும் ஜனாதிபதி இங்கு உரையாற்றுகையில் –
இன்று இந்த நாட்டில் சமாதானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இனங்களுக்கிடையில் நல்லுறவு நிலவுகின்றது.அன்று பயங்கரவாதிகளினால் இப்பிரதேசத்தின் டொலர் பார்ம் பகுதியில் வசித்து வந்த 190 பேர் பயங்கரவாதிகளினால் ஈவிரக்கிமன்றி படுகொலைசெய்யப்பட்டனர்.மிகவும் பொன் விளையும் இந்த பூமியில் இருந்து இம்மக்கள் வெளியேறினர்.இவர்கள் தற்போது மீளகுடியேறிவருகின்றனர்.இன்று எதிர்கட்சிகள்இஎமது அபிவிருத்திகளுக்கு எதிராக சேறு பூசும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.விவசாயிகளிடம் அவர்களின் முகத்தை காட்டுகின்ற போதுஇஅரசாங்கம் பசளைகளுக்கான நிவாரணம் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டை சுமத்திவருகின்றனர்.7 வது முறையாக நாம் பசளைகளுக்கான உதவிகளை விவசாயிகளுக்கு வழங்கிவருகின்றோம்.சிறு நீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்தாலும் அவர்கள் இந்த பசளையினை அரசாங்கம் வழங்குகின்றது.இந்த நோயினை கட்டுப்படுத்த ஒன்னும் செய்வதில்லையென்று கூறுகின்றனர்.இது தான் அவர்களது வேலையாக இருக்கின்றது.
இன்று எமது நாடு அரிசியில் தணிணிறைவு கொண்ட நாடாக மாறியுள்ளது.அதற்கு மேலாக அரிசியினை ஏற்றுமதியும் செய்து வருகின்றது.எமது நாட்டின் பணவளத்தை கொண்டு இந் நாட்டு மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொடுப்போம்இவெளிநாடுகளை நம்பிக் கொண்டு இருக்க வேண்டிய நிலை மாற்றமடைந்துவருகின்றது.
இந்த நாட்டின் ஜனநாயக விழுமியங்களை நாம் பாதுகாத்து வருகின்றோம்.அதற்கமைவாக வடக்கில் தேர்தலை நடத்தவுள்ளாம்.அதனை செப்டம்பர் மாதம் நடத்த எண்ணியுள்ளோம்.அதற்கான சுப நேரத்தையும் பார்த்துள்ளோம்.வெற்றி பெறும் சுபநேரம் அதுவாகும்..
வடக்கில் ஆசிரிய பிரச்சினை காணப்படுவதாக அறிகின்றேன்.அதனை நிவர்த்திக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.இம்மாதம் 30 ஆம்திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம்இஅதிலும் போதுமான தகுதியுடையவர்கள் இல்லையெனில் அது குறித்து நாம் கவனம் செலுத்துவோம்.எனது காலத்தில் 55 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.44 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
விவசாயிகளுக்கான சேதனை பசளை தயாரிக்கும் இயந்திரங்களும் ஜனாதிபதியினால் கையளிக்ககப்பட்டது.
வெலி ஓயாவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா
வடக்கில் இடம் பெயர்ந்த அனைத்து தமிழ் மக்களையும் அவர்களது பிரதேசங்களில் மீள்குடியமர்த்தியுள்ளோம்.-ஜனாதிபதி
Reviewed by NEWMANNAR
on
April 21, 2013
Rating:

No comments:
Post a Comment