அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சொரூபம் மீதான தாக்குதல் நாட்டின் பொருளாதார நெருக்கடியை திசை மாற்றவா?- பாஸ்க்கரா


அண்மையில் மன்னார் சொரூபம் மீதான தாக்குதல் நாட்டின் மின்சார கட்டண உயர்வுக்கு பின்னரான பொருளாதார நெருக்கடியை திசைமாற்றுவதற்கான தந்திரோபாயமா என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி. பாஸ்க்கரா

கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,


போர்க்கால சூழலில் நாட்டின் பொருட்களின் விலை ஏற்றம், தனிநபர் வருமான வீழ்ச்சி, பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் சுமை போன்ற நெருக்கடியான சூழல் வரும்போது நாட்டின் போரை காரணம் காட்டி தப்பி வந்த போது சிங்கள மக்களும் அவ் பசுப்பு வார்த்தையை நம்பி போர் முடிந்த பின் தாம் செல்வ செழிப்பாக வாழ்வோம் என நம்பிய மக்களுக்கு போர் முடிந்த நான்கு வருடத்தின் பின்னரும் மேலும் மேலும் பொருட்களின் விலை ஏற்றத்திற்கு பின்னரான பொருளாதார நெருக்கடியை கொடுக்கும் போது அதை தாங்கமுடியாமல் தடுமாறி தன்னிலையறியாது மக்கள் திண்டாடுகின்றனர்.

பொருட்கள் விலையேற்றத்தின் பின்னரான மக்கள் சுமையை திசைமாற்ற இப்போ ஓர் பூதாரமாக உருவாகியுள்ள மதப்போர் அரசுக்கு வரப்பிரசாதமாக உள்ளது இதனை அரசு அடக்காமல் இருப்பதற்கு காரணம் மதவாதத்தை காரணம் காட்டி விலையேற்றத்தை மூடிமறைக்கவா என கேட்க முடிகின்றது?

மேலும் சொரூபம், பள்ளிவாசல், கோவில்கள் மீதான தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இல்லையேல் மக்களின் சந்தேகம் வலுப்பெறும்.

போருக்கு பின்னரான காலத்தில் சமாதானம் நல்லிணக்கம் என்பதை அரசு உதட்டளவில் தெரிவித்து சமாதான சூழலை உருவாக்கும்படியும், நியாயம் வேண்டி கருத்துரைத்த தமிழ் அரசியல்வாதிகளை இராணுவத்திற்கு மட்டும் தெரிந்த இராணுவ இரகசியங்களை வெளியிட்டார் எனவும் இராணுவப் பெண்கள் பிரிவைப் பற்றி செய்தி வெளியிட்டார்கள் எனவும்

பொலிசார் விசாரிப்பது உரிமை கேட்போரின் வாயை மூடும்படி செய்வதுடன் உண்மைநிலையை உணர்த்தும் ஊடகங்களான உதயன், தினக்குரல், வலம்புரி, எம்.ரீ.வி நிறுவனம் மீதான தாக்குதல் நடத்தியவர்கள் இன்னும் கைது செய்யப்படாமை அரசின் மீதான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது இது ஜனநாயக பண்புடைய நாட்டிற்கு ஏற்புடையதற்றது குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். தொடர்ந்து யாழ் பொலிஸ் அதிகாரி யாழில் மேலும் மேலும் உதயன் மீதான தாக்குதலுக்கு இடம் உண்டு என தெரிவித்த கருத்து ஜனநாயக நாட்டின் பொலிசாரின் மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான பங்கை கேள்விக் குறியாக்குகிறது. உரியவர்கள் உடன் கைது செய்யப்படட்டு ஜனநாயகத் தன்மை நிலைநாட்டப்பட வேண்டும்.

மேலும் உலக நாடுகளுக்கு இலங்கை உத்தரவாதமளித்த தீர்வை தமிழ் பேசும் மக்களுக்கு கொடுத்து ஜக்கிய இலங்கைக்குள் சமாதானமாக வாழும் சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் மேலும் வெளிநாட்டு முதலீடுகள் கூடி பொருளாதார சுமை குறைவதுடன் போர்க்கு பின்னராக புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பாரிய பண, தங்கங்களை நாட்டில் அரசு முதலீடு செய்து பொருளாதார நெருக்கடியை இலகுவாக தீர்க்க வழிசெய்ய முடியும். அன்றி மேலும் மேலும் நாட்டை அதள பாதாளத்தில் இட்டு சென்றால் அண்மை காலத்தில் லிபியா, சிரியா நாட்டிற்கு ஏற்பட்ட கதியை இலங்கைக்கும் ஏற்படும் என பாஸ்க்கரா தெரிவித்தார்.
மன்னார் சொரூபம் மீதான தாக்குதல் நாட்டின் பொருளாதார நெருக்கடியை திசை மாற்றவா?- பாஸ்க்கரா Reviewed by NEWMANNAR on April 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.