சிலாவத்துறை வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கோரி மகஜர் கையளிப்பு
மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறை வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்ற நிலையில் அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு கோரி முசலி பிரதேச பிரஜைகள் குழு இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை கையளித்துள்ளதாக முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் அமைப்பாளர் சுனேஸ் சோசை தெரிவித்தார்.
குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,,,,,
மேற்படி விடயம் தொடர்பாக முசலி பிரதேச பிரஜைகள் குழுவானது 2010 ஆண்டு தொடக்கம் இன்று வரைக்கும் முசலி பிரதேசத்தில் பிரஜைகள் குழுவை அமைத்து மக்களின் பிரச்சினைகளை உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி அதனை மக்களுக்கு பெற்றுக்கொடுத்துக் கொண்டு இருக்கின்றோம். குறிப்பாக 2007ம் ஆண்டு நடைபெற்ற இடப்பெயர்விற்கு பிறகு 2009ம் ஆண்டு மக்கள் தங்களின் சொந்த இடத்தில் மீள்குடியேற்றப்பட்டனர்.
ஆனால் இங்கு தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு வாழ்ந்து வருகின்ற ஒரு இடமாக காணப்படுக்கின்றது. 2009ம் ஆண்டு தொடக்கம் 2012 ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் சிலாவத்துறை வைத்தியசாலையில் ஒரே ஓரு வைத்திய அதிகாரி மாத்திரமே மக்களுக்கு சேவையினை திறம்பட நடத்தி வந்தமையை எமது பிரஜைகள் குழு அவதானிக்க முடிந்தது. இருந்தும் மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாகவும் நோயாளிகளின் வருகையினையும் கருத்தில் கொண்டு 2012 ஒக்டோபரில் இருந்து சிலாவத்துறை வைத்தியசாலைக்கு 2 வைத்தியர்களை நியமித்துள்ளீர்கள் . இதனை இட்டு முதலில் எமது முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் சார்பாக நன்றிகளை கூறி நிற்பதோடு வைத்தியர்களும் ஊழியர்களும் மக்களுக்கு இரவு பகலாக செய்து வருகின்ற சேவைகளுக்கும் நன்றிகளை கூறி நிற்கின்றோம்.
இருந்த போதிலும் எமது முசலி பிரதேசத்தில் 30 கிராமங்களுக்கு மேல் காணப்படுக்கின்றது. குறிப்பாக இப்பகுதி நோயாளர்கள் சிலாவத்துறை வைத்தியசாலையினை நம்பிதான் தங்களின் நோய்க்கான நிவாரணியை தேடி வருக்கின்றார்கள். குறிப்பாக ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 150 நோயாளிகளுக்கு மேல் வைத்தியசாலைக்கு வருகின்றார்கள். இருந்த போதிலும் நாளாந்தம் இப்பகுதி மக்கள் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டு இருப்பதனை பிரஜைகள் குழு அவதானித்துக் கொண்டு இருக்கின்றது.
இதில் ஒரு முக்கியமான பிரச்சனை தான் வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் மக்களுடன் நடந்துக் கொள்ளும் விதங்கள். இந்த விடயம் பற்றி பல தடவைகள் மக்கள் எமது பிரஜைகள் குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு எமது பிரஜைகள் குழு பல தடவைகள் இதனை நேரடியாக பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொண்டது. இதன் அடிப்படையில் இனங்காணப்பட்ட பிரச்சனைகளை உங்கள் முன் முன்வைக்கலாம் என எண்ணியுள்ளோம்.
மருந்து கலவையாளர்
•நோயாளிகளுடன் அன்பாக பேசாமல் அவர்களை தரம் குறைவாக பேசுவது. •நோயாளிகளுக்கு மாத்திரைகளை கொடுக்கும் போது எவ்வாறு பாவிப்பது பற்றி விளக்கம் அளிக்காமை. இதை பற்றி நோயாளிகள் கேட்டவுடன் நோயாளிகளுடன் எரிபுரியாக கதைப்பதும் இது பற்றி உங்களுக்கு தேவையில்லை நான் தரும் மாத்திரைகளை நீங்கள் கொண்டு போடுங்கள் என நோயாளிகளுக்கு கூறுவதும் நோயாளிகளின் மனதில் மனதாங்களை ஏற்படுத்துகின்றது.
•வைத்தியசாலையில் தமிழ் முஸ்லிம் ஊழியர்கள் சேவை செய்து கொண்டு இருக்கின்றார்கள். குறிப்பாக தமிழ் பெண் ஊழியர்களுடன் தகாத வார்த்தை பிரயோகங்கள் மற்றும் வார்த்தைகளின் வடிவில் பெண்களுடன் இரட்டை அர்த்தத்துடன் கதைப்பது.
•மாத்திரைகளை மாறி மாறி கொடுப்பது.
•குறிப்பாக தனக்கு மேல் உள்ள அதிகாரிகளை மதிக்காமல் மற்றும் அவர்கள் கூறும் கருத்துக்களை செவிமடுக்காமல் தான் சொல்லுவதுதான் சட்டம் என் அதிகாரிகளை நசுக்குவது.
வைத்தியர்கள்
•நோயாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப 2 வைத்திய அதிகாரிகளை நியமித்து சேவையில் ஈடுப்படுத்தி இருந்தாலும் நோயாளிகள் தங்களின் பிரச்சினைகளை தமிழ் மொழியில் கூறுக்கின்ற போது வைத்தியர்களின் மொழிப் பிரச்சினையால் சிக்கல்கள் ஏற்படுகின்றது.
•ஊழியர்களுக்கும் வைத்திய அதிகாரிகளுக்கும் இடையிலான முறுகல் நிலைக் காணப்படுகின்றது.
•சிறிய சிறிய பிரச்சினைகளுக்கும் நோயாளிகளை மன்னார் வைத்தியசாலைக்கு அனுப்புதல்.
•கடந்த காலத்தை விட தற்போது நோயாளிகளின் பதிவு மிகவும் கீழ்மட்டத்தில் காணப்படுவதாகவும் குறிப்பாக சாதாரண குழந்தை பிரவேசத்தைக் கூட அலட்சியப்படுத்தி மன்னார் வைத்தியசாலைக்கு அனுப்புதல். அவ்வாறு அனுப்பியதில் பலர் நோய்காவு வண்டியில் குழந்தை பெற்றெடுத்த சந்தர்ப்பங்கள் அதிகதாக காணப்படுக்கின்றது.
•மற்றும் சீனி வருத்தம் காரணமாக கிளினிக் வரும் நோயாளிகள் கூட காலையில் சாப்பிடாமல் வருகின்றார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் படை வீரர்கள் மருந்து எடுக்க வருகின்ற போது அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதுடன் ஏனைய நோயாளிகள் பல மணி நேரம் காத்து கிடக்க வேண்டிய நிலைகாணப்படுகின்றது.
•வைத்தியருக்கும் ஊழியர்களுக்கும் இடையில் காணப்படும் சில பிரச்சினைகளின் காரணமாக 09-04-2013 அன்று காலை 10.30 மணியளவில் கையொப்பம் இடும் பதிவேட்டினை நோயாளிகள் இருக்கத்தக்கதாக தூக்கி வீசப்பட்டமையினால் கொப்பிவேறாக உறைவேறாக சிதறிகாணப்பட்டமை.
• கடமை நேரங்களில் வைத்தியர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வந்தால் ஊழியர்களை அவர்களுடன் இடங்கள் காட்டுவதற்கு அனுப்புவது.
பொதுவான பிரச்சினைகள்.
•வைத்தியசாலையில் அடிப்படை வசதிகள் இல்லாமை. •வைத்தியசாலைக்கென அபிவிருத்தி சங்கம் காணப்படாமை. •வைத்தியசாலையினை சுற்றி சுற்றுமதில் காணப்படாமை. •வைத்தியசாலையினை சுற்றி வீதி விளக்குகள் பொருத்தப்படாமை.
•குடி நீர் பிரச்சினை காணப்படுகின்றது.
•வைத்தியசாலையில் விடுமுறை வழங்குவதில் பாரப்பட்சம்.
•மருத்துவமாது போதாமை.
இவை போன்ற பிரச்சினைகளை சிலாவத்துறை வைத்தியசாலையில் எமது பிரஜைகள் குழு நேரடியாக அவானித்துள்ளது. எமது முசலி பிரதேச பிரஜைகள் குழுவும் முசலி வாழ் மக்களும் விரும்புகின்றோம் ஏனைய பிரதேசங்களில் காணப்படும் வைத்தியசாலை அபிவிருத்திபணிகள் போன்று எமது வைத்தியசாலையும் அபிவிருத்தி பெற்று எதிர்காலத்தில் நோயாளிகளை சரியான முறையில் பராமரிப்பதற்கு ஏற்ப வசதிகளையும் மற்றும் மேலே முன்வைக்கப்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு இதற்குரிய சரியான ஒரு தீர்வினை பெற்றுத்தரும்படி முசலி பிரதேச பிரஜைகள் குழு ஊடாக கேட்டு நிற்கின்றோம். என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Reviewed by NEWMANNAR
on
April 26, 2013
Rating:

No comments:
Post a Comment