அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தமிழ்ச் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் (இரண்டாம் இணைப்பு)

மன்னார் தமிழ்ச் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் மன்னார் தமிழ்ச் சங்கத்தின் பொதுக்கூட்டம் கடந்த 25ஆம் திகதி (25.04.2013) மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு அருட்பணி மையமான கலையருவி மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தின்போது புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. இதன்போது இச்சங்கத்தின் புதிய தலைவராக மீண்டும் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார்.


பொதுச்செயலாளராக ஆசிரியர் திரு. எம். சிவானந்தன் அவர்களும் பொருளாளராக ஜனாப் எஸ். எச். எம். ஷிஹார் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். சிரேஷ்ட துணைத்தலைவராக ஜனாப் மக்கள் காதர் அவர்களும், துணைத் தலைவராக மகாஸ்ரீ தர்மகுமார குருக்கள் அவர்களும், துணைப் பொதுச் செயலாளராக திருமதி பெப்பி விக்ரர் லெம்பேட் அவர்களும், நிர்வாகச் செயலாளராக திரு. மன்னார் அமுதன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இதைவிட நான்கு நிர்வாகக்குழு உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் கருத்துரைத்த தமிழ் நேசன் அடிகளார் எதிர்காலத்தில் மன்னார் தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகளை விஸ்தரிக்கவுள்ளதாகவும் மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து கலை இலக்கிய ஆர்வலகர்கள், ஆற்றல்வாய்ந்தவர்களை சங்கத்திற்குள் உள்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

 மாணவர் அணி, இளைஞர், பெண்கள் அணி, முதியோர் அணி எனப் பல கிளைகளைகளையும் நாடகக்குழு, நாட்டியக்குழு, சங்கீதக்குழு, கவிஞர்குழு, எழுத்தாளர்குழு, அண்ணாவியார்குழு என பல குழுக்களையும் உருவாக்கி மன்னார் தமிழ்ச் சங்கத்தை பரந்த பலமான ஓர் கலை இலக்கிய அமைப்பாக கட்டியெழுப்பவுள்ளதாகவும் இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை எனவும் குறிப்பிட்டார்.
மன்னார் தமிழ்ச் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் (இரண்டாம் இணைப்பு) Reviewed by NEWMANNAR on April 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.