மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கும்,மக்களுக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்துவது தொடர்பான கருத்தரங்கு
மன்னார் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தி மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்த்துக்கொள்வது தொடர்பான ஒரு நாள் முழு நேர கருத்தரங்கு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் மாவட்ட சர்வோதைய அமைப்பில் இடம் பெற்றது.
-மன்னார் மாவட்ட சர்வோதைய அமைப்பின் இணைப்பாளர் சிறினிவாசன் யுகேந்திரா தலைமையில் இடம் பெற்ற கருத்தரங்கில் விரிவுரையாளர்கலாக மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ்,இந்து மத பிரதம குரு விஜய பாகு சர்மா,மாவட்ட மேலதிக பதிவாளர் கே.நடராஜா,மன்னார் பிரஜைகள் குழுவின் உப தலைவர் சிந்தாத்துரை ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.
-குறிப்பாக மாவட்ட மக்களுக்கு பொறுப்புக்கூறவேண்டிய அதிகாரிகள் தொடர்பிலும் அவர்களின் பொருப்பு,மக்கள் அவர்களை எவ்வாறு நாடிச் செல்வது தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கும்,மக்களுக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்துவது தொடர்பான கருத்தரங்கு
Reviewed by NEWMANNAR
on
April 10, 2013
Rating:
No comments:
Post a Comment