மன்னார் மாவட்டத்தில் அதி கூடிய நிலுவைகளைக்கொண்ட 510 குடி நீர் இணைப்புக்கள் துண்டிப்பு
இதற்கமைவாக அறிவித்தல்களையும் மீறி அதி கூடிய நிலுவைத்தொகைகளை செலுத்தாத 510 பாவனையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களுடைய குடி நீர் இணைப்புக்கள் தற்போது துண்டிக்கப்பட்டு வருகின்றது. 5 ஆயிரம் ரூபாவிற்கு மேல் உள்ள நிலுவைத் தொகைகளை உடைய நீர் பாவனையாளர்களுடைய இணைப்புக்கள் தற்போது துண்டிக்கப்பட்டு வருகின்றது.
துண்டிக்கப்படும் இணைப்புக்களை உடனடியாக மீளப்பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் நிலுவைத் தொகையினை முழுமையாக செலுத்துவதோடு,மீள் இணைப்புக்கட்டணமாக இரண்டாயிரத்து இருநூற்று நாற்பது ரூபாய்(2240.00) செலுத்துவதன் மூலம் குடி நீர் இணைப்பை மீளப்பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் மன்னார் மாவட்ட பொறியியலாளர் வி.உதயசீலன் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் அதி கூடிய நிலுவைகளைக்கொண்ட 510 குடி நீர் இணைப்புக்கள் துண்டிப்பு
Reviewed by Admin
on
May 17, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment