கிளிநொச்சியில் உதிரவேங்கை வைரவர் ஆலயம் உடைக்கப்பட்டு விக்கிரகங்கள் கொள்ளை
இன்று காலை ஆலயத்தை வழிபடச் சென்றவர்கள் ஆலயம் உடைக்கப்பட்டு இருந்ததை அவதானித்து பரிபாலனசபைக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே வேளை ஆலயக் காணியைக் கரைச்சிப் பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன் பெரும்பான்மை இனத்தவர் ஒருவருக்கு வழங்கியுள்ளார்.
இதற்கு இப்பிரதேச மக்கள் எதிர்ப்புக்களைத் தெரிவித்து பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் குறித்த காணியை அபகரிக்கும் நோக்குடனேயே இவ்வாலயத்தின் மீதான கொள்ளைச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சியில் உதிரவேங்கை வைரவர் ஆலயம் உடைக்கப்பட்டு விக்கிரகங்கள் கொள்ளை
Reviewed by Admin
on
May 03, 2013
Rating:

No comments:
Post a Comment