மருதமடு புனர்வாழ்வு முகாமும் மூடப்பட்டது
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழ், மன்னார், மருதமடு பிரதேசத்தில் இயங்கி வந்த முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு முகாம், கடந்த 17ஆம் திகதியுடன் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், புனர்வாழ்வுக்காக எஞ்சியுள்ள 340 முன்னாள் போராளிகள், வவுனியா – பூந்தோட்டம், வெலிகந்த - சேனபுர மற்றும் கந்தக்காடு போன்ற மூன்று புனர்வாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி - தெரிவித்தார்.
வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்த மற்றும் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்ட 12,165 முன்னாள் போராளிகளுக்கு நாட்டின் பல பாகங்களிலும் அமைக்கப்பட்ட 24 புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வந்தது.
இவ்வாறு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு தொழிற்பயிற்சிகளை நிறைவு செய்தவர்கள் கட்டம் கட்டமாக அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்த முன்னாள் போராளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைவடைந்து எஞ்சியுள்ள 340பேர் நான்கு புனர்வாழ்வு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், இவர்களை நிர்வகிப்பதில் ஏற்பட்டுள்ள நடைமுறைச் சிக்கல்கள் காரமாக மருதமடு புனர்வாழ்வு முகாம் மூடப்பட்டு அதிலிருந்த 100பேரும் ஏனைய மூன்று முகாம்களுக்கும் மாற்றப்பட்டுள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் முன்னாள் பெண் போராளிகள் 17பேர் உட்பட 122பேர், சேனபுர முகாமில் 119பேரும் கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் 99பேரும் என 340 பேர் தொடர்ந்தும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்று பிரிகேடியர் கூறினார்.
இதுவரை புனர்வாழ்வளிக்கப்பட்டோர், அவர்களுக்கான புனர்வாழ்வின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது புனர்வாழ்வு பெற்றுவரும் 340பேரும் வெகு விரைவில் புனர்வாழ்வினை முடித்துக்கொண்டு தங்களது உறவினர்களிடம் சென்றடைவர் என்றும் அவர் கூறினார்.
மருதமடு புனர்வாழ்வு முகாமும் மூடப்பட்டது
Reviewed by Admin
on
May 20, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment