அரசுடன் இணைந்து செயற்படப்போவதாக வெளியான தகவல் உண்மை இல்லை:வினோ எம்.பி!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பிலான பேச்சுவார்த்தையொன்று அண்மையில் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் வினோ எம்.பி.க்கும் இடையில் இடம்பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கத்திடம் கேட்டபோது அவர் தெரிவிக்கையில்,,,
'அரசாங்கத்துடன் இணைந்து செயற்படப் போகிறேன் என்று வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது' என்று குறிப்பிட்டார். 'மக்கள் எமக்கு வாக்களித்து எம்மை மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்திருக்கின்றார்கள். மக்களின் ஆணையை மீறி நாங்கள் ஒரு போதும் செயற்பட மாட்டோம்' என்றும் அவர் தெரிவித்தார்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரநிதிகள் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர்களுடன் சந்திப்பது வழமையானது.
அதிலும் வன்னி மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற நான் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கடற்தொழிலில் தொடர்பில் ஏற்பட்டு வருகின்ற பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர்களுடன் கலந்துரையாடினேன்' என்றும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் பசிலுடன் எமது ரெலோ அமைப்பு சார்பாக எமது அனைத்து கட்சி உறுப்பினர்களும் சந்தித்திருந்தோம்.
ஒரு காலத்தில் வவுனியா மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் செயற்பட முடியாத காலகட்டத்திலும் அமைச்சர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளேன். புகைப்படமொன்றினை வைத்துக்கொண்டு தவறான செய்திகள் வெளியாகியுள்ளமை கவலையளிக்கிறது' என்று வினோ எம்.பி மேலும் தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
June 15, 2013
Rating:

No comments:
Post a Comment