அண்மைய செய்திகள்

recent
-

கத்தோலிக்க பேராயர்கள் சம்மேளனம் விடுத்த கோரிக்கை அரசால் நிராகரிப்பு!

அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தச் சட்டத்தில் எந்த மாற்றங்களையும் செய்ய வேண்டாம் என கத்தோலிக்க பேராயர்கள் சம்மேளனம் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களை சேர்ந்த12 பேர் விடுத்திருந்த கோரிக்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.


நாட்டின் தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக அரசசார்பற்ற நிறுவனங்களுடனோ, மத அமைப்புகளுடனோ எவ்விதமான இணக்கப்பாடுகளுக்கும் செல்வதில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் இந்த கோரிக்கையை நிராகரிக்க நேர்ந்ததாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களின் கருத்துக்களை கேட்டறியாது, இந்தியாவினால், 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் இலங்கை மீது பலவந்தமாக திணிக்கப்பட்டது. அப்போது மேற்படி அமைப்புகள் அமைதியாக இருந்தன எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

உலகில் எந்ததொரு நாடும் தமது நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயத்தில், தனது பாதுகாப்பு பேரவையின் ஆலோசனைகளை பின்பற்றுமேயன்றி அரசசார்பற்ற நிறுவனங்களின் கோரிக்கைக்கு தலைவணங்காது. அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் இணக்கப்பாடுகளை ஏற்படுத்தி கொள்ள வில்லை என அமெரிக்க அரசாங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை தேசிய பாதுகாப்பு தொடர்பில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்தி கொள்வதை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அண்மையில் நிராகரித்திருந்தார் 
கத்தோலிக்க பேராயர்கள் சம்மேளனம் விடுத்த கோரிக்கை அரசால் நிராகரிப்பு! Reviewed by NEWMANNAR on June 12, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.