மன்னார் பிரதேச சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் உள்ள உணவு கையாளும் நிலைய உரிமையாளர்,பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை.

மன்னார் பிரதேச சபையும்,மன்னார் மாவட்ட பொது சுகாதார சேவைகள் பணிமனையும் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
முதற்கட்டமாக மன்னார் பிரதேச சபை பிரிவில் உள்ள சகல விதமான உணவு பொருட்களையும் கையாளுகின்ற உணவகங்களின் உரிமையாளர்கள்,பணியாளர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனையையும்,அதற்கான தகுதி சான்றுதழ்களையும் வழங்கவுள்ளோம்.
-நாளை சனிக்கிழமை,ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் காலை 9.30 மணிமுதல் பேசாலை பிரதேச சபை கட்டிடத்தில் இடம் பெறும்.
-குறித்த மருத்துவப்பரிசோதனைக்கு சகல உணவு கையாளும் நிலையங்களின் பணியாளர்களும்,உரிமையாளர்களும் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு தகுதி சான்றிதல் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மன்னார் நகர சபைக்குற்பட்ட பகுதிகளில் உள்ள உணவு கையாளும் நிலையங்களின் பணியாளர்கள்,உரிமையாளர்களுக்கு எதிர்வரும் வாரம் மருத்துவப்பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
-குறித்த இரு தினங்கள் பேசாலையில் இடம் பெறும் மருத்துவப்பரிசோதனையில் கலந்து கொண்டு தகுதிச்சான்றுதல்களை பெற்றுக்கொள்ளாத உணவு கையாளும் நிலையங்களின் பணியாளர்கள்,உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி ஞானசீலன் குனசீலன் தெரிவித்தார்.
மன்னார் பிரதேச சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் உள்ள உணவு கையாளும் நிலைய உரிமையாளர்,பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை.
Reviewed by NEWMANNAR
on
June 07, 2013
Rating:

No comments:
Post a Comment